Digital Time and Date

Welcome Note

Wednesday, May 30, 2012

ஆண்கள் ஏன் தங்கம் அணியக்கூடாது கூடாது?



தங்கம் ஆண்கள் அணியலாம ? அணியக்கூடாத ? என்று கேள்வி கேட்டு இருந்தோம் சிலர் தங்கம் அணியலாம் சிலர் அணிய கூடாது என்று சொல்லி இருந்தார்கள் ஏன் நாம் தங்கம் அணியக்கூடாது என்று சொல்லுகிறார்கள் ?

பொதுவாக பெண்களே தங்கம் என்ற உலோகத்தை அணிகலனான அணிந்து கொள்ளுகிறார்கள் . ஆனால் ஆண்கள் அதனை அணிவத அணியக்கூடாத ? என்று தான் இங்கு கேள்வி . இதைப் பற்றி சில அறிஞர்கள் அனுபவ ரீதியிலான தங்கம் அணியக்கூடாது என்று தங்கள் கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார்கள். இஸ்லாம் மார்கத்திலும் ஆண்கள் தங்கம் அணிவது தடை செய்ய பட்டு உள்ளது

அதாவது தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை விரைவில் வெளியேற்றக் கூடியது என்று சோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. உலகில் உள்ள உலோகங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதில் உள்ள வெப்பம் முழுமையாக வெளியேறாமல் அது சிறிது நேரம் சூடாகவே இருக்கும். அதிக நேரம் சென்ற பிறகு தான் அதன் வெப்பம் தணியும்.

ஆனால் தங்கத்தைச் சூடேற்றி அதைத் தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதன் வெப்பம் முழுமையாக வெளியேறி இருக்கும்.

இந்தச் சோதனை அடிப்படையில் ஆண்கள் தங்கம் அணியும் போது அவர்களின் உடலில் உள்ள வெப்பம் வேகமாக வெளியேற்றப்படும். ஓரளவு சூடாக இருக்க வேண்டிய ஆணகளின் உடல் சூட்டை அதிகம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தாம்பத்தியத்தையும் பாதிக்கும்.

தாம்பத்திய உறவுக்கு ஆண்களின் உடல் ஓரளவுக்கேனும் சூடாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் சரியான இன்பத்தை அடைந்து கொள்ள முடியும்.

ஆனால் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விடக் குளிர்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடம் அழகு மிளிரும். அவர்கள் தங்கம் அணிவதால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment