Digital Time and Date

Welcome Note

Wednesday, May 30, 2012

பழமையான மதம். எனவே இந்து மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், -அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும். இல்லையா?

பழமையான மதம். எனவே இந்து மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், -அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும். இல்லையா?

டாக்டர்

ஜாஹிர் நாயக் அவர்களிடம் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிய போதுமானவன் (முகநூல் வழியாக முஹம்மது மீராசாகிப்)

பதில்:

1. இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் பழமையானது.
இந்து மதம் உலகில் உள்ள மதங்களில் எல்லாம் பழமையான மதம் என்பது தவறான வாதம்.
இஸ்லாமிய மார்க்கம்தான் உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் முதலாவதாக தோன்றியதும்,
பழமையானதும் ஆகும். இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மார்க்கம்தான்
என்றும், அதனை தோற்றுவித்தது முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் என்றும் தவறான
கருத்தினை மக்கள் கொண்டுள்ளனர். இஸ்லாமிய மார்க்கம் உலகம் தோன்றிய நாள் முதலாய்
இருக்கிறது. ஆதி மனிதன் இப்பூமியில் காலடி பதித்த நாள் முதலாய் இஸ்லாமிய மார்க்கம்
இவ்வுலகில் தோன்றிய மார்க்கமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை தோற்றவித்தது முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வல்லோன் அல்லாஹ்வின் இறுதித் தூதர்
ஆவார்கள்.

2. பழமையான மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த மதமாகவும் இருக்க
வேண்டும் என்கிற அவசியமில்லை.

ஒரு மதம் பழமையானது என்பதால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த மதமாகவும், மிகவும்
தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோல் சரியானது அல்ல. இந்த
அளவுகோல் எவ்வாறு இருக்கிறதென்றால், ஒரு சுத்தமான குவளையில் தற்போது நிரப்பப்பட்டிருக்கும்
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விட, மூன்று மாதங்களுக்கு முன்னால் பிடிக்கப்பட்டு, (வீட்டில்,
குளிர்சாதன பெட்டிக்கு வெளியில்) திறந்து வைக்கப்பட்ட தண்ணீர்தான் சுத்தமானது என்று ஒருவர்
சொல்வதை போன்று இருக்கிறது.

3. அதுபோல புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மதம்தான் மிகவும் தூய்மையானதாகவும், மிகச் சிறந்த
மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

அதுபோல ஒரு மதம் புதிதாக தோன்றியது என்கிற காரணத்தால் மாத்திரம் அந்த மதம் ஒரு சிறந்த
மதமாகவும், மிகவும் தூய்மையானதாகவும் கருதப்பட வேண்டும் என்கிற அளவுகோலும் சரியானது
அல்ல. மூன்று மாதங்களுக்கு முன்னால் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு
பாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், தற்போது பிடிக்கப்பட்ட கடல் தண்ணீரை விட சுத்தமானது
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

4. ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால்
அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ
செய்யப்பட்டிருக்கக் கூடாது.

ஒரு மதம் தூய்மையானதாகவும், சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் எனில், இறைவனால்
அருளப்பட்ட அந்த மதத்தின் வேதங்களில், எந்தவித இடைச்செருகலோ, கூடுதலோ, குறைவோ
செய்யப்பட்டிருக்கக் கூடாது. இறையுணர்வின் பிறப்பிடம், மற்றும் இறைக் கட்டளைகள்
இறைவனிடமிருந்து வந்ததாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு உலகில் இருக்கும்
வேதங்களில் அருள்மறை குர்ஆன் மாத்திரம்தான் அது அருளப்பட்ட விதத்திலேயே (மனித
கரங்களால் எந்தவித மாறுதல்களும் செய்யப்படாமல்) பாதுகாக்கப் பட்டிருக்கிறது. மற்ற
மதங்களின் வேதங்கள் யாவும், கூட்டப்பட்டும், குறைக்கப்பட்டும், இடைச்செருகல்கள்
செருகப்பட்டும்தான் இருக்கிறது. அருள்மறை குர்ஆனை மனனம் செய்த லட்சக்கணக்கான
உலமாக்களின் மனப்பாட வடிவில் - அருள் மறை குர்ஆன் - அது அருளப்பட்ட வடிவில் - இன்றும்
பாதுகாக்கப்பட்டு உள்ளது. அத்தோடு, நபித்தோழர் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில்
தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள், தற்போது தாஷ்கன்டில் உள்ள
அருங்காட்சியகத்திலும், துருக்கியின் உள்ள கொப்தாகி (முழுPவுயுமுஐ) அருங்காட்சியகத்திலும்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதிகளோடு, நம்மிடம் உள்ள அருள்மறை குர்ஆனை
ஒப்பிட்டு பார்த்தால், ஒரு சிறிய மாற்றத்தையும் காணவே முடியாது.

அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:
'நிச்சயமாக நாம் தான் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்: நிச்சயமாக நாமே அதன்
பாதுகாவலானகவும் இருக்கின்றோம்.' (யுட – ஞரசயn 9:15)

5. பழமையான மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது பழமையான மதம் என்கிற
அளவுகோல் சரியானது அல்ல. 1998 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டொயோட்டோ காரைவிட 19ஆம்
நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட கார்தான் சிறந்த கார், ஏனென்றால் அது பழைய கார் என ஒரு
மனிதன் சொல்வது போன்றுதான் இதுவும். ஒரு சிறிய சாவியைக் கொண்டு காரை இயங்க
வைக்கும் புதிய முறையை விட, ஒரு பெரிய இரும்பு கம்பியால் திருகி காரை இயங்க வைக்கும்
பழைய முறை சிறந்தது என வாதிடுபவரை நாம் ஒரு முட்டாள் என்றுதான் கருதுவோம்.

6. அதுபோல புதிதாக தோன்றிய மதம்தான் மிகச் சிறந்த மதமாகவும் இருக்க வேண்டும் என்கிற
அவசியமும் இல்லை.

அதுபோல ஒரு மதம் சிறந்த மதமாக இருக்கிறது என்பதற்கு காரணம், அது புதிதாக தோன்றிய
மதம் என்கிற அளவுகோலும் சரியானது அல்ல. 1999 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 ஊஊ
மாருதிகார், 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 5000 ஊஊ மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 ளுநுடு காரை விட
சிறந்தது என்று சொல்வது போன்றுதான் இதுவும். இரண்டு வாகனங்களில் சிறந்தது எது என்று
மதிப்பிட வெண்டுமெனில், வாகனங்களை பற்றிய முழு விபரங்களையும் அறிய வேண்டும்.
உதாரணத்திற்கு - வாகனங்களின் ஓடும் திறன், வாகனங்களின் பாதுகாப்புத் தன்மை, வாகனத்தில்
உள்ள இயந்திரம் இயங்கும் திறன், அவைகள் செல்லும் வேகம், அவைகளில் உள்ள வசதி போன்ற
வாகனங்களின் அனைத்து விபரங்களையும் ஒப்பிட வேண்டும். அவ்வாறு ஒப்பிட்டு பார்த்தால், 1997
ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 500 ஊஊ மெர்ஸிடிஸ் பென்ஸ் 500 ளுநுடு கார், 1999 ஆம் ஆண்டு
தயாரிக்கப்பட்ட 500 ஊஊ மாருதிகாரை விட பன்மடங்கு சிறந்தது என்பது தெரிய வரும்.

7. மனித குலத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் மதமே, சிறந்த மதமாகும்.

இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளுக்கு ஒரு மதம் தரும் நிரந்தர தீர்வுகள்தான்,
அந்த மதம் சிறந்த மதமாக கருதப்படக் கூடியதற்கு காரணமாக அமைய வேண்டும். எல்லா
காலங்களிலும் பின் பற்றக் கூடிய அளவிற்கு, அந்த மதம் உண்மையான மதமாக இருக்க வேண்டும்.
இவ்வுலகில் வாழும் மனித குலத்தின் பிரச்னைகளான மது மற்றும் போதைப் பொருள்கள், அதிக
சதவீத்தில் உள்ள பெண்கள், கொடுந்தொல்லைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இனவெறி,
சாதிப்பிரச்னை போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது இஸ்லாமிய மார்க்கம்
ஒன்றே.

இஸ்லாமிய மார்க்கம் உண்மையான மார்க்கம் ஆகும். அதன் சட்டங்களும், தீர்வுகளும், எல்லா
காலத்திற்கும் ஏற்புடையது. இன்று உலகில் உள்ள வேதங்களில் இஸ்லாமிய மார்க்கத்தின்
வேதமான அருள்மறை குர்ஆன்தான் இன்றுவரை அதன் தூய்மையையும், நம்பகத்தன்மையையும்
பாதுகாக்கப்பட்ட வேதமாக உள்ளது. அருள்மறை குர்ஆனின் நம்பகத்தன்மையும், தூய்மையும்
அருள்மறை குர்ஆன் இறை வேதம்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது.
அத்துடன் எல்லா காலத்திற்கும் ஏற்ற வேதம் என்பதையும் நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு -
அருள்மறை குர்ஆன் - அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த அற்புதங்களுக்கு சவாலாக
அமைந்தது. அது இறக்கியருளப்பட்ட காலத்திலிருந்த கவிதை, எழுத்தாற்றல் போன்ற
இலக்கியங்களுக்கும் சவலாக விளங்கியது. இன்றைய காலகட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சி
அடைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கும் அருள்மறை குர்ஆன் ஓர் சவலாக
அமைந்துள்ளது. அத்தோடு இஸ்லாமிய மார்க்கம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல.
இறைவனால் மனித சமுதாயத்திற்கு தரப்பபட்ட மார்க்கம்தான் இஸ்லாமிய மார்க்கம். இஸ்லாமிய
மார்க்கம் மாத்திரம்தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய மார்க்கமும் ஆகும்.

No comments:

Post a Comment