இஸ்லாமிய எதிரிகளால் போலி...யாக விமர்சிக்க படும் ஒரு செய்தி என்னவென்றால் இந்த
குர் ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்டது இறைவனிடமிருந்து
அருளப்பட்டது அல்ல என்று மக்கள் மத்தியிலே பொய் உரைத்து வருகின்றனர்.
அவர்களது பொய்களை தகர்த்தெறியும் வண்ணம் அல் குர் ஆனில் பல வசனங்கள்
உண்டு அதில் ஒரு வசனம் அல்லாஹ்வின் தூதர் அவர்களையே கண்டிக்கும் வகையில்
அமைந்துள்ளது எந்த ஒரு மனிதனும் தான் உருவாக்கிய ஒன்றில் தன்னை
கண்டிக்கும் செய்தியை மக்களுக்கு வெளி இடமாட்டன் ஆனால் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் தன்னை இறைவன் கண்டித்த வசனத்தையும் எந்த தயக்கமும் இன்றி
வெளியிடுகிறார்கள்.
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
அல் குர் ஆன் 80:1.
குறைசி தலைவர்களிடம் ஒரு சிறிய உடன் படிக்கைகாக அல்லாஹ்வின் தூதர்
அமர்ந்து இருக்கும் போது தாழ்ந்த குலத்தில் உள்ளவராக குறைசி காபிர்களால்
கருத பட்ட கண் பார்வை தெரியாத அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) அந்த
சபைக்கு வருகிறார் உடன் படிக்கையே குறைசி உயர்ந்த குலத்தவர்களுக்கு தனி
மரியாதை அளிக்க வேண்டும் என்பது குறித்து தான். அந்த சமயத்தில் சபைக்கு
வந்த அந்த சாஹிபியை பார்த்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முகத்தை
சுளிகின்றார்கள்.
அப்பொழுது அருளபட்டது தான் இந்த வசனம்
அல்லாஹ்வினுடைய தூதர் நினைத்து இருந்தால் இந்த வசனத்தை மறைத்து
இருக்கலாம்,கண் பார்வை தெரியாத அந்த சாஹிபிக்கு தெரியவா போகிறது நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்து??
தனது சுயகௌரவத்தை
பாதிக்கும் வகையில் இறங்கிய இவ்வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
இவ்வுலகிற்கு வெளியிடுகிறார்கள் என்றால் இந்த குர் ஆன் அவர்களால்
உருவாக்கபட்டதா ??
அவதூறு பரப்புபவர்களே சிந்தியுங்கள்!!!
No comments:
Post a Comment