ஒருமுறை சார்ஜ் 320 Km. வருகிறது அசத்தல் மோட்டார் பைக் கார்.
லாஸ் ஏஞ்சலஸ் :
இரண்டு சக்கரங்களுடன் மோட்டார் பைக் காரை அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பேட்டரியில் ஓடும் இது 2014 முதல் விற்பனைக்கு வருகிறது. செக்வே ஸ்கூட்டர்ஸ் மற்றும் ஹோண்டா யுனி,கப் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே மோட்டார்பைக் வடிவில் மேல்புறம் மூடப்பட்ட இருசக்கர காரை அறிமுகம் செய்தன.
அவற்றைவிட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடுதல் பாலன்ஸ், வேகம், சக்தி வாய்ந்த பேட்டரியுடன் லிட் சி,1 என்ற மோட்டார்பைக் காரை அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
கார் போல கதவுகளுடன் மூடப்பட்டிருக்கும் இந்த பைக்,காரில் ஓட்டுநர் இடத்தில் ஸ்டியரிங் இருக்கும். பின்னால் ஒருவர் உட்காரலாம். பைக்,காரின் அடிப்பகுதியில் கைரோஸ்கோப் என்ற மின்னணு படிமம் இடம்பெறும். இது இரண்டே சக்கரங்கள் கொண்டிருந்தாலும் லிட் சி,1 பைக்கை கார் போல பாலன்ஸ் செய்யும். ஓட்டுநரைவிட பின்னால் உட்கார்பவர் அதிக அசைவுகள் இல்லாமல் பாலன்சுடன் அமர வேண்டும். மற்றபடி, கார் போல இதை ஒரே இடத்தில் நிறுத்தலாம்.
பாலன்சுக்காக பயன்படுத்தப்படும் கைரோஸ்கோப் மின்னணு படிமம், விமானங்கள் மற்றும் சொகுசு கப்பல்களிலும் தள்ளாட்டமின்றி பயணிக்க பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு பேர் பயணம் செய்வதுடன் குறிப்பிட்ட எடை வரை லக்கேஜ்களும் இந்த மோட்டார்பைக் காரில் எடுத்து செல்லலாம். லிட் சி,1ல் பொருத்தப்படும் எலக்ட்ரிக் ட்ரைவ் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி காரணமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும்.
அதேபோல, அதிகபட்சமாக மணிக்கு 193 கி.மீ. வேகத்தில் இது பறக்கும். சாதாரண 4 சக்கர எலக்ட்ரிக் கார்களின் வேகத்தை விட இது பல மடங்கு அதிகம். இந்த மோட்டார்பைக் கார் 2014ல் விற்பனைக்கு வரும் என கூறிய விஞ்ஞானிகள் விலை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றனர்.
No comments:
Post a Comment