Digital Time and Date

Welcome Note

Wednesday, June 6, 2012

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மைகள் – தீமைகள்

 
யார் வீட்டு பணத்தில் யாருக்கு கொடுப்பது இந்த இலவசம்? இது அத்தனையுமே ஊதாரித்தனமான அரசின் செலவுகள்தான். இருப்பிடம், சுகாதாரம், உணவு - இவைகளைத் தவிர வேறு எதை கொடுத்தாலும் அது ஊதாரித்தனமே. சரியாக சொல்ல வேண்டுமானால் திருட்டுத்தனம், மக்களின் வரி பணத்தை எடுத்து திருடி (Siphoning off) ஒரு பிரிவனருக்கு மாத்திரம் கொடுப்பது. இது வெட்கப்பட வேண்டிய திட்டம். இத்தகைய பொருகளின் மேல் தமிழக முதல்வர்களின் உருவத்தை பதித்து கொடுத்தது சால பொருத்தம்.

.
இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மைகள் – தீமைகள்


வறுமையில் உள்ள ஏழைகளின் வாழ்வு மலர அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. உண்மையிலேயே வறுமையில் வாடும் ஏழைகள், இலவச கேஸ் அடுப்பு (1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டிவி பெற்று ஓரளவிற்கு திருப்திபட்டுக் கொள்கின்றனர். அவ்வளவுதான் வசதி படைத்தவர்களும் இத்திட்டத்தை பயன்படுத்துவதுதான் வேதனையான விஷயம்.
பொங்கல் தினத்தன்று இலவச வேஷ்டி சேலை கொடுக்கின்றனர். பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் தருகின்றனர். அன்றாடம் கூலி வேலை பார்ப்போர் கட்டிடத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், டிரை-சைக்கிள், ரிக்ஷா ஓட்டுவோர்,தெருவோரம் பிளாட்பாரத்தில் குடியிருப்போர் போன்ற ஏழைகள் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
தீமைகள்:
கூலி வேலைக்கு போகாமல் உடம்மை வளைக்காமல் (உழைக்காமல்) வீட்டில் சொகுசாக படுத்துக்கொண்டு டிவி பார்த்து வீணாக பொழுதைக் கழிப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் கிராமப்புரத்தில் விவசாயக் கூலிகள் கிடைப்பதில்லை. இதனால் எனது7 ஏக்கர் விவசாய நிலம் தரிசாக (வீணாக) உள்ளது என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறேன். என்னைப் போல பல விவசாயிகள் உள்ளனர். அரசின் இலவசத் திட்டத்தால் உழைப்பாளிகள் சோம்பேறியாக மாறிவிட்டார்கள். இருபது கிலோ அரிசி வாங்கினால்
15 தினத்திற்கு போதும் என நினைக்கிறார்கள். இலவசம் கொடுப்பதற்கு பதிலாக வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுத்தால் வீடும் நாடும் முன்னேறும்.
மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டமும் போலியானது. உழைப்பது போல நடிப்பதற்கு ரூ.100 க்கு பதிலாக குறைவாக கொடுக்கிறார்கள். தோட்டத்திற்கு அருகே உள்ள சிற்றோடையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால், யாரும் பணி செய்வதில்லை. தென்னந்தோப்பில் படுத்து நன்றாக உறங்கிவிட்டு (காலை 10 வரை 3 மணி வரை) 5 மணி நேரம் கழித்து பணம் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறார்கள்.
அரசுப்பணம் (மக்களின் வரிப்பணம்) இப்படி வீணாகிறதே என வேதனை படத்தான் முடிந்தது. உண்மையிலேயே சிற்றோடையை வெட்டி அகலப்படுத்தி, ஆழப்படுத்தி அதுபோல கண்மாய்களையும் ஆழப்படுத்தியிருந்தால் தற்போது பெய்த புயல் மழைநீர் தேங்கியிருக்கும். நீர்மட்டம் உயர்ந்திருக்கும்2 வருடத்திற்கு மழை பொய்த்து போனால் கூட தாக்கு பிடிக்கலாம்.
போலித்தனமான சுயநலம் உள்ள அரசியல்வாதிகள்,அதிகாரிகள் இவர்களால் அரசு பணத்தை முறையாக செலவு செய்யப்பட்டவில்லை. கட்சிகள் ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி வீசுகின்றனர். இப்படியே போனால் நாட்டில் உணவு உற்பத்தி குறைந்து அயல்நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகிவிடும். இதை பொது மக்கள்தான் சிந்திக்க வேண்டும். அரசியல்வாதிகள் பொதுநல தொலைநோக்கோடு பார்க்க வேண்டும்.
எது சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எது செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்.
எதுவேண்டுமானாலும் செய்யலாம் இவர்களால் என்ன செய்துவிடமுடியும்? என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. நாம் எதுவும் செய்யாமல்தான் போய்க்கொண்டிருக்கிறோம்.

பொதுக்கூட்டங்கள்..ஊர்வலங்கள்..மாநாடுகள்...பிறந்தநாள் விழாக்கள்..எனும் பெயரால் அரசின் சொத்து - நமது சொத்து சூறையாடப்படுகிறது. படிக்கிற பிள்ளைகளுக்கு மின்சார வசதி கிடைப்பதில்லை தேர்வு சமயங்களில் மின்சாரத்தடை. இவர்கள் அளவுக்கதிகமான மின்சாரத்தை வீணாக்குகிறார்கள். நேர்மையான அரசியல் வேண்டும். நேர்மையான தலைவர்கள் வேண்டும். சாதியின் பெயரால்...வாரிசுகளின் பெயரால் அரசியல் அமையக்கூடாது.

மக்களை நினைக்கின்ற மக்களை வாழ வைக்கின்ற மக்களின் கண்ணீர் துடைக்கப்படுகின்ற மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிற அரசு அமையவேண்டும்.
இலவசங்கள் எனும் பெயரால் வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான பண விரயத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை எனும் அடிப்படையில் செலவிட்டால் அது நிரந்தரத் தீர்வாக அமையும்.
முறையான கல்வியைக் கற்றல்...நேர்மையாகப் பணியாற்றல்.. தகுதியோடு பணியுயர்வு...திறமைகள் மதிக்கப்படல்...பண விரயத்தைத் தடுத்தல்...மக்களின் பிரதிநிதிதான் தாங்கள் என்று உணர வைத்தல்...இவைதான் ஜனநாயக அரசின் அடையாளங்கள்.
படிப்பறிவு என்பது நல்ல சிந்தனையை வளர்ப்பதற்குத்தான். சிந்திப்போம்.

No comments:

Post a Comment