Digital Time and Date

Welcome Note

Monday, June 25, 2012

சிஸ்டம் டிப்ஸ்

* கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள். அல்லது எதனையேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். அப்போது திடீரென அந்த புரோகிராம் எதுவும் செய்திடாமல் நின்று விடுகிறது. எந்த சலனமும் இல்லாமல் அப்படியே உள்ளது. என்ன செய்யலாம்? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று பார்ப்போமா?
CTRL + ALT + DEL என்ற மூன்று பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். ஒரு கட்டம் எழுந்து வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் வரிசையாகக் காட்டப்பட்டிருக்கும். அந்த பட்டியலில் உங்களைத் திகைக்க வைத்த புரோகிராம் பெயரைத் தேடித் தேர்ந்தெடுங்கள். பின் End Task என்ற கட்டத்தில் கிளிக் செய்திடுங்கள். இனி உங்கள் கம்ப்யூட்டர் முடக்கம் நீங்கி மீண்டும் செயல்படத் தொடங்கும். இப்போது மீண்டும் நீங்கள் விரும்பிய அந்த புரோகிராமை இயக்கி செயல்படுங்கள்.

* உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\ என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில் Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \ என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.

* நெட்வொர்க் (Network) : தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர்களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப்பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.

No comments:

Post a Comment