Digital Time and Date

Welcome Note

Monday, June 4, 2012

*****அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!*****


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி, வ பாரக்காத்துஹு

*****அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!*****


இன்று ஃபேஸ்புக்கில் முஸ்லிம் பெண்களின் பெயரில்...பொய்யான profile களை உருவாக்கி ,தானும் வழி கெட்டு, மற்றவர்களையும் வழிகெட வைக்கும் ஒரு கும்பல் நம்மில் அலைந்து கொண்டிருக்கிறது ...

வழி கேட்டிற்கு இழுக்கும் நண்பர்களே....நீங்கள் செய்யும் இந்த பாவச் செயலின் விபரீதம் தெரியாமல் அலட்சியமாக தொடர்கிறீர்கள்

இதனால் தப்பான கோணத்தில் அந்நிய சமூகம் நமது பெண்களை எடை போட்டுள்ளனர் ..
மேலும் பலர் உங்களது பொழுது போக்கிற்கான கருத்துக்களுக்கு மயங்கி,பெண் என நினைத்து தங்களையும் பாவத்தின் பக்கம் சேர்த்துக் கொள்கின்றனர்

தேவையில்லாமல் தங்களின் பதிவுகளில் வீண் பேச்சுக்களை பகிந்து கொள்கின்றனர் ..

இதில் அப்பாவி(?) பெண்களிடமும் பல தவறுகளை காண முடிகிறது

"ஏன்மா பொது இடங்களில் இப்படி உங்களின் பர்சனல் விஷயங்களை பகிர்வது சரியில்லையே என கேட்டால்...என் அண்ணன், என் தம்பி, என் மாமன்,என் மச்சான் என்று சொல்லி தங்களின் தவறுகளை நியாயப் படுத்துகிறார்கள்..

சில பெண்கள் பதிவுகள் போடுவதே அரட்டை அடிக்கத்தான்....தேவையில்லாத பேச்சுக்களை பகிர்ந்து கொள்ளத்தான்..

இன்னும் சிலரோ ...எல்லை மீறிப் போய் அருவருப்பான,ஆபாசமான படங்களை டேக் பண்ணுகிறார்கள் ....

وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ

இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.2:48.

அல்லாஹ்தான் அனைத்து மக்களையும் ஷைத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து பாதுகாக்கணும்!!"

No comments:

Post a Comment