Digital Time and Date

Welcome Note

Wednesday, June 20, 2012

கஞ்சத்தனம்



பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..

கஞ்சத்தனம்

அல்லாஹ் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் தர்மம் செய்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும் என்றே இஸ்லாம் கற்றுகொடுகின்றது. மேலும் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். ஆதலால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்று நினைகின்றார்கள்.

அவ்வாறு நிணைபவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)

அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 47:38)

அஸ்மா(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள். நூல்: புகாரி (2590)

நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) நூல்: புகாரி (1434)

தாராளத் தன்மையையும், மற்றவர்க்கு வழங்குவதையும் உயர்ந்த பண்புகள் எனக் கூறும் இஸ்லாம் கஞ்சத்தனதையும் எச்சரிக்கை செய்கின்றது. சமூகத்தில் வசதி படைத்தோரின் செல்வத்தில் கேட்பவர்களுக்கும் கேட்காதவர்களுக்கும் உரிமையுண்டு எனக் குர்ஆன் தெளிவாக்கிறது. இப்படிப் பல்வேறு வழிமுறைகளின் மூலம் சமூகத் தளத்திலிருந்து கஞ்சத்தனம் எனும் இழி குணத்தை இஸ்லாம் விரட்டி அடிக்கின்றது.

நாம் அணைவரும் கஞ்சத்தனத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் தேடுவது மிகவும் அவசியமானது ஆகும்.

“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) (நூல் புகாரி 4707)

அல்லாஹ் கஞ்சத்தனத்திலிருந்து நம் அனைவரையும் பாதுகாத்து மறுமை வாழ்க்கையை வெற்றி அடைய செய்வானாக. இன்ஷா அல்லாஹ்..


No comments:

Post a Comment