Digital Time and Date

Welcome Note

Monday, June 25, 2012

இஸ்லாம் வழங்கும் இனிய பொன்மொழிகளைக் கேட்போமா!

* தனிமனிதனின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.
* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவர்.
* அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.
* இறைவன் ஒருவனே. அவனே அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்தான். எனவே, அனைத்து நாடுகளும், அனைத்து மனிதர்களும் சமமே. இறைவனின் வழிகாட்டுதலும் அனைவருக்கும் பொதுவானதே.
* (இறைவனின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால், கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்று விடுவார்கள்.
* திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றனர். மேலும், வீணானவற்றை விட்டு விலகியிருக்கின்றார்கள்.
* இறைவன் அருளிய உணவை உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்.

No comments:

Post a Comment