Digital Time and Date

Welcome Note

Saturday, June 30, 2012

கீரிப்பிள்ளை இனம் அழிவின் விளிம்பில் !!!


கீரிப்பிள்ளை இனம் அழிவின் விளிம்பில் !!!

வனவிலங்குகள் என்றாலே சிங்கம், புலி, யானை, சிறுத்தை, கரடி, ஓநாய் என்ற ஊனுண்ணிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சத்தம் போடாமல் வனத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுபவை சிறு ஊன் உண்ணிகள் எனப்படும் பூனை வகைகள், கீரி வகைகள் மற்றும் நீர் நாய், மர நாய் போன்றவைகளாகும். இவையே விவசாயிகளின் தோழர்களாகவும் அழைக்கப்படுகின்றன.

மாமிச பட்சிகளான ஊனுண்ணிகளில் 5 முதல் 8 கிலோ எடை வரையுள்ள விலங்குகளே சிறு ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. நகரமயமாக்கலினாலும், விவசாய நிலங்கள் அழிந்து வருவதாலும் பல வருடங்களுக்கு முன்னர் கிராமங்களில் நமது வீடுகளுக்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்த இவ்விலங்குகள் தற்போது வனப்பகுதிகளை மட்டுமே நம்பி வாழக்கூடிய நிலையிலுள்ளதால் பெரும்பாலானவை அழிவின் விளிம்பிலுள்ளன
.
மங்கூஸ் எனப்படும் கீரி இனத்தில் காமன் கிரே, ருடி மங்கூஸ், பிரவுன் மங்கூஸ், ஸ்டிரைப்படு நெக் மங்கூஸ் போன்றவை.
கீரிப்பிள்ளை பொதுவான இனங்கள் உள்ளது. 11 அங்குலத்தில் இருந்து 16 அங்குலம் வரை இருக்கும். அவைகளின் ரோமங்களின் நிறம் ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்துடன் இருக்கும். அவைகளுக்கு குறுகிய கால்கள் இருக்கும் மற்றும் ஆண்கள் பெண்களை பெரிதாக இருக்கும். அவைகள் இரவில் நிலவொளியில் வேட்டையாடும்.

கீரிகள் புல்வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும் பொந்து அமைத்து தனியாகவோ அல்லது ஜோடிகள் வாழ்கிறது. மற்றும் பாறைகளின் இடையே ஒரு குகை போன்ற அமைப்பு அமைத்து வாழ்கிறது.
பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், பறவைகள், விலங்குகள், நில நீர் வாழ்வன, அழுகிய, முட்டை மற்றும் எப்போதாவது பழத்தில் உள்ள கொட்டையை உணவாக உட்கொள்கிறது.

கீரி ஒரு வருடத்தில் பல முறை குட்டிபோடுகிறது கருகாலம் 60 நாட்கள் மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும் குட்டிகளை பெண்கீரியே வளர்க்கும். 3 வாரத்தில் அவைகள் கண்களை திறக்கும் மற்றும் 4 வது வாரத்தில் அவைகள் திட உணவு சாப்பிட தொடங்குகிறது 50 நாட்களில் அவைகளின் வயது எடை மூன்று மடங்காக ஆகும். வயது 9, 10 வாரங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகிறது. கீரி வகைகள் 40 கிளையினங்கள் உள்ளன.

அழகான இவற்றின் வால் முடியைக் கொண்டு ஓவியம் தீட்டுவதற்கான தூரிகைகளைத் தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டதால் கீரிப்பிள்ளை இனம் அதற்காகவே அழிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் இறைச்சிக்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்பட்டு விட்டன.

No comments:

Post a Comment