Digital Time and Date

Welcome Note

Tuesday, June 26, 2012

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அபாயப் பள்ளிகள்

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் அபாயப் பள்ளிகள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலின் செயல் பாடுகள், ஊடுருவல்கள் பற்றி வெளிப்படுத்திய கருத்துகளை, தகவல்களை அலட்சியப் படுத்தினால், அதற்காக நாடு மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைத் திணிக் கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த அமைப்புகள் மூலம் இந்தியாவில் 28,861 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இதில் 32,33,337 மாணவர்கள் பயிலுகிறார்கள். 1,57,741 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்குத் தனியாக பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பும் உண்டு.

இவையன்றி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லா வற்றிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன என்றால், பெரிய விளக்கங்கள் தேவைப்படாது.

முழுக்க முழுக்க இந்துத்துவா வெறி என்னும் நஞ்சு ஊட்டப்படுவதோடு, சிறுபான்மை மதங்கள் மீது குரூரமான முறையில் வெறுப்பு விதைகளும் தூவப்படும் அபாயமும் உண்டு.

இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் வெளியே வருவார்களேயானால், நாட்டில் அமளி துமளிகளும், வன்முறைகளும், அமைதியற்ற தன்மையும்தானே தலை விரித்தாடும்? இதற்கான பயிற்சிதானே அவர்களுக்குத் தரப்படுகிறது?

ஆசிரியர் தினம் என்று அரசு அறிவித்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக வியாச முனிவர் பிறந்த நாள் என்று ஜூன் 25 ஆம் தேதி கடைப் பிடிக்கப்படுகிறது.

குழந்தைகள் தினம் என்று அரசு அறிவித் துள்ள நேருவின் பிறந்த நாளை இவர்கள் ஒப்புவதில்லை. மாறாக இந்துக் கடவுள் கிருஷ் ணன் பிறந்த நாள் என்று கோகுலாஷ் டமியைத்தான் கொண்டாடச் செய்கிறார்கள்.

பாடத்திட்டங்கள் எப்படி இருக்கும்? எடுத்துக் காட்டாக ஒன்று. உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்புப் பாடத்தில் இடம் பெற்றிருப்பதாவது : முலாயம் சிங் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந் துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட் லுக் 10.5.1999)

யூதர்கள் மீது வெறியைக் கிளப்புவதற்காக அடால்ப் ஹிட்லர் இப்படித்தான் பாடத் திட்டங்களை அமைத்துக் கொடுத்தார்.

இந்திய வரலாற்றுக் குழுவை மாற்றி அமைத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அதில் திணித்தது பி.ஜே.பி. ஆட்சி.

இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bom Mahib Factories) மாற்றப்பட்டுவிட்டது பா.ஜ.க. ஆட்சியில்என்று ஃப்ரன்ட் லைன் ஏட்டில் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன், டி.கே.ராஜ லட்சுமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகள் கண் காணிக்கப்பட வேண்டும்.

ஆய்வுக் குழு ஒன்றை நியமித்து இப்பள்ளிகளின் பாடத் திட்டங்கள், பயிற்சிகள் பற்றி உண்மை கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நன்றி :தி க -வின் விடுதலை இதழில் இருந்து