Digital Time and Date

Welcome Note

Friday, June 1, 2012

ஜும்மா தினத்தன்று (துஆ அங்கீகரிக்கப்படும்) அந்நேரம் பற்றிய பாடம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு...

ஜும்மா தினத்தன்று (துஆ அங்கீகரிக்கப்படும்) அந்நேரம் பற்றிய பாடம்.

ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் : 401
“நிச்சயமாக ‘ஜும்ஆ‘வில் (ஜும்ஆ நாளில்) ஒரு நேரமுண்டு, அந்நேரத்திற்கு ஒரு முஸ்லிம் தொழுகையிலிருக்க1 அதை அவருக்கு அல்லாஹ் தந்ததை தவிர எந்த நன்மையையும் அவர் அல்லாஹ்விடம் கேட்பதில்லை” என அபுல் காஸிம்ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகஅபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.தனது கையினால் அந்நேரத்தை குறைத்து அர்ப்ப சொர்ப்பமானது எனக்காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. “தொழுகைக்காக காத்திருப்பவர் தொழுகையில் இருக்கிறார்” என்ற நபிமொழிக்கொப்ப ‘அஸர்‘ தொழுத ஒருவர் ‘மக்ரிபை‘ எதிர்பார்த்துத் தொழ உள்ளார். ஆகவே அக்கருத்தில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வார்த்தையைக் கூறியிருக்கிறார்கள் என்றும்,2.‘யுஸல்லீ‘ என்ற அரபி வார்த்தைக்கு துஆ கேட்கிறார் என்ற பொருளும் உண்டு. ஆகவே துஆ கேட்கிறார் - கேட்டவராக என்றும் ‘காயிமுன்‘ நின்றவராக என்பதற்கு அதைத்தொடர்ந்து செய்பவராக என்றும் ஆகிய இருகருத்துக்கள் குர்ஆன் ஹதீஸின் தெளிவில் உங்கள்முன் வைக்கப்பட்டுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் : 402

ஜும்ஆ தினத்தன்று ‘துஆ‘ அங்கீகரிக்கப்படும் நேரம் பற்றிய விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகஉமது தந்தை அறிவிக்கும் அறிவிப்பை நீர் கேள்விப்பட்டதுண்டா? என அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள், (அபுமூஸா அல் அஷ்அரியாகிய) என்னிடம் கேட்டனர். அதற்குநான் ‘ஆம்‘ “அந்நேரம் (என்பது) இமாம் மிம்பரில் அமர்ந்(த)து (முதல்) தொழுகை நிறைவுபெறும் வரைக்குமுள்ள இடைப்பட்ட நேரமாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்ததை நான் செவியுற்றேன் என்றேன்.அறிவிப்பவர் : அபுமூஸா அல் அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹுகுறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்அபுபுர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நின்று விட்டது. நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வரை இத்தொடர் சென்றடையவில்லை. ஆகவே ‘ஜும்ஆ‘ நாளன்று ‘துஆ‘ அங்கீகரிக்கப்படும் நேரம் ‘‘அந்நாளின் கடைசி நேரமாகும்‘‘ என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அவரல்லாத மற்றவர்களின் அறிவிப்பில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சேர்ப்பிக்கப்பட்ட சரியான ஹதீஸ்களில் தெளிவாக வந்துள்ளன. அவையாவும் அது அந்நாளின் கடைசி நேரம் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

No comments:

Post a Comment