நபி வழியைப் புறக்கணிப்பவனின் கதி.
நபி வழியைப் புறக்கணிப்பவனின் கதி.
நபி வழியைப் பின்பற்றாதவனுக்குரிய தண்டனையை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.
“எவர் நபி வழிக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை
பிடித்துக் கொள்வதையோ அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்
கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (24 : 63)
“(நபியே!) நீர்
கூறும் “அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுங்கள். ஆனால் அவர்கள்
புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் அல்லாஹ் காபிர்களை நேசிப்பதில்லை’
(3 : 32)
“அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நாங்கள்
விசுவாசித்தோம் (அவர்களுக்கு) வழிப்பட்டோம் என்று அவர்கள் சொல்லிக்
கொள்கிறார்கள். ஆனால் பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து
விடுகின்றனர். எனவே இவர்கள் உண்மை விசுவாசிகளல்லர்” (24 :47)
மேற்கூறப்பட்ட வசனங்களெல்லாம் நபிவழியைப் பின்பற்ற வேண்டியதன்
அவசியத்தையும், நபிவழியைப் பின்பற்றாதவனுக்குரிய தண்டனையையும் மிகத்
தெளிவாக விளக்குகின்றன.
No comments:
Post a Comment