Digital Time and Date

Welcome Note

Thursday, June 21, 2012

பிராணிகளில் நாய்(dog) யை பற்றி........


அல்லாஹ்வின் திருப்பெயரால்..பிராணிகளில் நாய்(dog) என்பது ஒரு நல்ல பிராணிதான் அதே சமயத்தில் அதில் உள்ள தீமைகளையும் பார்ப்போம்..பொதுவாக நாம் நாயை வீட்டில் வளர்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் அது என்ன செய்கிறது..?நம் வீட்டுனுள்ளே சுற்றி திறியும்,நாம் உண்ணும்பொழுதும்,உறங்கும் பொழுதும் நம் அருகிலேயே இருக்கும்.நாய்க்கு ஒரு கெட்ட தன்மை என்ன வென்றால் அது தன்னுடைய நாக்கை நீட்டிகொண்டு தனது உமிழ் நீரை அது வெளிப்படுத்தும் அது மிகப்பெரிய கிருமியாகும் அதனால் மரணமும் ஏற்படும் ஆபத்துகள் உண்டு.இது பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்த விசயம்.தான் வளர்க்கும் நாய் தன்னையே தாக்கும் அபாயமும் உண்டு.நாயை செல்ல பிராணியாக வீட்டினுல் அனுமதிப்பது இஸ்லாத்தில் தடுக்க பட்ட செயலாகும்.நாய் வளர்க்கும் அனுமதி இரண்டே விசயத்திற்க்காகத்தான்

.1.பாதுகாவலாக வைத்துக்கொள்வது

.2.வேட்டை ஆடுவதற்கு பயன் படுத்துவது.

இந்த இரண்டு விசயங்களுக்காக நாயை வளர்க்கலாம் இதில் வேரு எதுவும் விவாதம் பன்ன தேவை இல்லை...

.1.பாதுகாப்பிற்காக என்பது எப்படி...நீங்கள் பெரிய தோப்பு வைத்துள்ளீர்கள்,அல்லது விவசாயம் பண்ண கூடிய இடமாக இருக்கலாம், அதில் அவைகள் பாதுகாப்பிற்காக,அல்லாது ஏதேனும் கால்நடை மந்தைகள் வைத்து இருந்தால் அதற்காக நாயை வளர்த்துகொள்ளலாம்,(களவுகள் போகும் என்ற அச்சத்தினால் பாதுகாப்பிற்காக).
ஹதீஸை காண்போம்..'''கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு காரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)..

அதில் நீங்கள் ஏதாவது காரணத்திற்காக தொட்டால் தப்பில்லை.விசயம் என்ன வென்றால் அது வெளிப்படுத்தும் உமிழ் நீர் நோயை ஏற்படுத்தும் என்பதால். அதில் நம்மை பாதுகாத்துகொள்ளவேண்டும்.

2.வேட்டை ஆடுவது-நாம் நன்கு பயிற்றுவிக்கபற்ற நாய்களை வேட்டைக்காக பயன் படுத்தி அதில் பெறப்படும் பிராணிகளை(மாமிசங்கள்) சாப்பிடுவது குற்றம் ஆகாது.அதிலும் சட்டம் என்னவென்றால் நமது வேட்டை நாய்களை வேட்டைக்கு அனுப்பும்பொழுது ''அல்லாஹ்''வின் பெயர்கூறி அனுப்பவேண்டும்

அல்லாஹ் கூறுகிறான்..''(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.(அல்-குரான் 5:4)

மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நாய்கள் வளர்க்கப்படவேண்டும் என்பது தெள்ளத்தெளிவாக புறிகிறது. .இதை நாம் வீட்டில் அனுமதிக்க கூடாது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்

. இதை தொட்டால் 40 நாள் தொலுகை கூடாது என்றெல்லாம் சொல்லப்படவில்லை.உங்களுடைய ஆடைகளில் பட்டுவிட்டால் தண்ணீரைக் கொண்டு சுத்தப்படித்திகொள்ளுங்கள்.

வீட்டினுல் அனுமதிக்கவேண்டாம்..ஹதீஸை பார்ப்போம்..''ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார்.(ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது) "உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை" என்றார். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).