இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic).
1982 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் பிறந்த இவருக்குப் பிறந்த
போதே கைகளில்லை, கால்களுமில்லை. இப்படிப் பிறந்த ஒருவர் வாழ்ந்து என்ன தான்
செய்து விட முடியும் என்று எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும்.
அவர் நடப்பார், நீந்துவார், விளையாடுவார், எழுதுவார் என்றெல்லாம் சொன்னால்
அது கற்பனைக்கும் எட்டாத பொய் என்று தானே நினைக்கத் தோன்றும். ஆனால்
இன்றும் அதை எல்லாம் செய்து காட்டுகிறார் அவர் என்பது தான் அதிசயிக்க
வைக்கும் உண்மை.
அவருக்கு இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆறாம் விரல் போன்றதொரு பாகம் தான் அவரால் இயக்க முடிந்த ஒரு பாகம்.
பள்ளியில் படிக்கச் சென்ற அவரை அனைவரும் ஏளனமாகவும், வேற்றுக்கிரகவாசி போலவும் பார்ப்பது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
13 வயது வரை அவர் சதா தற்கொலை சிந்தனைகளிலேயே இருந்தார்.
ஆனால் தற்கொலைக்குக் கூட அடுத்தவர் உதவ வேண்டி இருந்த பரிதாப நிலை அவருடையது.
அவருடைய 13ஆம் வயதில் ஒரு பத்திரிக்கையில் மிக மோசமாக உடல் ஊனமுற்ற ஒரு
மனிதர் அதையும் மீறி செய்த அற்புத செயல்களைப் பற்றி எழுதியிருந்ததைப்
படித்தார்.
படிக்கையில் அவருக்குள் ஒரு மின்னல் அடித்தது.
அந்த செய்தி பெரியதோர் மாற்றத்தை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தியது.
தளராத மனத்துடன் ஒவ்வொரு புதிய செயலையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டார்.
கம்ப்யூட்டர் இயக்குவது முதல் டென்னிஸ் விளையாடுவது வரை கற்றுக் கொண்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
பல நாடுகளுக்குச் சென்று தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகள் ஆற்றும்
நிகழ்த்தி வரும் இவர், உடல் ஊனமுற்றவர்களுக்காக லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ்
(Life Without Limbs) என்ற ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு உதவி வருகிறார்.
{கைகள், கால்கள் மற்றும் உடலமைப்பு அனைத்தும் நல்லவிதமாக அமைந்து "தன்னம்பிக்கை" இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு இவர் ஒரு உதாரணம்.}
No comments:
Post a Comment