கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?
கிரெடிட்
கார்டு வேண்டும் என்று ஆசைப்பட்டு வாங்கிய பலரும் இன்றைக்கு அதை தலையை சுற்றி
தூரப்போடும் வேலையை செய்து வருகின்றனர். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஏதோ
சூனியத் தகட்டினை வாங்கிவிட்டோமோ என்று அஞ்சும் சூழ்நிலைக்கு வந்து விட்டனர். ஆனால்
எந்த ஒரு பொருளையுமே நமக்கு ஏற்றதாக பயன்படுத்தினால் அச்சப்படத் தேவையில்லை என்று
கூறும் நிபுணர்கள் கிரெடிட் கார்டில் உள்ள நன்மை, தீமைகளை
பட்டியலிட்டுள்ளனர்.
கிரெடிட்
கார்டு ஜாக்கிரதை
கிரெடிட்
கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப்போல சுமார் நான்கு மடங்கும், பெர்சனல்
லோனைப்போல சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது கிட்டத்தட்ட 35 முதல் 40 சதவிகிதம்
என்கிற அளவில் இருக்கும்.
கிரெடிட்
கார்டுக்கு வட்டி போக வேறு பல கட்டணங்களும் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் பணம்
கட்டவில்லை என்றால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். இது பாக்கித் தொகையைப் பொறுத்து
சுமார் 250 ரூபாயில் தொடங்கி 700 ரூபாய் வரை கட்ட வேண்டியிருக்கும்.
கிரெடிட்
கார்டு கடன்களை ரொக்கமாக கட்டினால் சில முன்னணி வங்கிகள் 100 ரூபாய் வரை அபராதம்
விதிக்கின்றன. அவை காசோலை அல்லது டி.டி மூலமே கட்ட வேண்டும் என்று
வலியுறுத்துகின்றன.
கிரெடிட்
கார்டு நல்லதிற்கே
கிரெடிட்
கார்டு மூலம் அவசரத்தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பெர்சனல் லோனை விட
வட்டி அதிகம்.
கிரெடிட்
கார்டு மூலம் இன்சூரன்ஸ் பிரீமியம், தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், ரயில்
டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போன்றவை இருக்கின்றன. இவை கட்டுவதற்கு பரிமாற்றக்
கட்டணம் எதுவும் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு செயல்படவும்.
கிரெடிட்
கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்திற்கு 45 முதல் 51 நாட்கள் வரை வட்டி
கட்ட வேண்டியதில்லை.
ஒவ்வொரு
கிரெடிட் கார்டு நிறுவனமும் ஒரு பில்லிங் சுழற்சியை வைத்திருக்கிறது. இதனால் நமக்கு
கிடைக்கும் சலுகைக் காலத்தை சரியாகப் பயன்படுத்தினால் வட்டியே இல்லாமல் ஊரார்
பணத்தில் ஈஸியாக பல பொருட்களை வாங்கலாம்.
அதேபோல்
கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி தொகையை சரியான தேதியில் கட்டி வந்தால்,
ரிவார்டு புள்ளிகள் மூலம் கணிசமான தொகை கிடைக்கும்.
ஆனால்
எந்த நேரத்திலும் பின்னால் வரப்போகிற பணத்தை நம்பி கிரெடிட் கார்டில் பொருட்களை
வாங்காதீர்கள் அதுவே ஆபத்தாகிவிடும்.
No comments:
Post a Comment