Digital Time and Date

Welcome Note

Wednesday, July 4, 2012

இதுவரை பிற மனிதர்களைக் கண்டிராதா காட்டுவாசிகள் !!!




காட்டு வாசிகள் உலகில் உள்ள பல நாடுகளில் வசித்துவருகின்றனர். இவர்கள் சாதாரண மக்களுடன் பழகுவதும் சிலவேளைகளில் நகரப்பகுதிகளுக்கும வந்துசெல்வதும் வழக்கம். ஆனால் இதுவரை காலமும் வேறு மனிதனர்களையோ இல்லை நகர வாசிகளையோ கண்டிராத காட்டுவாசிகள் பெரு என்னும் நாட்டில் வசித்துவருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இதுவரை காலமும் வெளியுலகத் தொடர்புகள் எதுவும் இன்றி காட்டில் வசித்துவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் தம் இனத்தவர்களை விட இவர்கள் பிறிதொரு மனித இனத்தை இதுவரை கண்டதில்லையாம். கடந்த வருடம் பெரு நாட்டில் காணப்படும் ஆம- சூன் எனப்படும் அடர்ந்த காட்டுப்பகுதியில் இவர்கள் வாழ்வது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களைப் புகைப்படம் எடுக்க முற்பட்ட உலங்கு வானூர்தியை இவர்கள் ஈட்டி மற்றும் கற்களால் தாக்கியும் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை இதுவரை உலங்கு வானூர்தியை அவர்கள் கண்டதோ இல்லை கேள்விப்பட்டதோ இல்லை. இதனை அவர்கள் ஒரு தீய சக்தியாகவே பார்க்கின்றனர்.

இருப்பினும் இவர்களோடு உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் இவர்கள் என்ன மொழியைப் பேசுகிறார்கள் என்பது தொடர்பாக அறிந்துகொள்ளவும் பல விஞ்ஞானிகள் பெரு நாட்டிற்க்குப் படை எடுத்தனர். இறுதியாக தற்போது இவர்கள் ஒரு வழியாக இக் காட்டுவாசிகளோடு நல்லுறவை ஏற்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment