Digital Time and Date

Welcome Note

Sunday, July 8, 2012

உங்கள் ஐ போன் ஸ்ரக் ஆகிவிட்டதா? எப்படி சரி செய்வது?

உங்கள் ஐ போன் ஸ்ரக் ஆகிவிட்டதா? எப்படி சரி செய்வது?

 
பெரும்பாலான இளைஞர்களின் இன்றைய கனவாக இருப்பது ஒரு ஐ போனுக்கு உரிமையாளர் ஆகவேண்டும் என்பதுதான்.

என்னதான் ஐ போன் பெறுமதிமிக்கதாய் இருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு பிரச்சினைகள் வருவது தவிர்க்கமுடியாதது.

சில சமயங்களில் ஐ போன் தொடுதிரை, பொத்தான்கள் அனைத்தும் இயங்காமல் அப்படியே ஸ்ரக் ஆகிவிடும்.

நாம் பயன்படுத்தும் ஏனைய போன்கள் என்றால் பற்றரியை கழற்றிவிட்டு மீள இணைத்து on பண்ணினால் சரியாகிவிடும். ஐ போனில் பற்றரி உள்ளே வைத்து (in Built) தயாரிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு செய்ய இயலாது.

முதலில் சாதாரணமாக ஐ போனை Switch off செய்து மீண்டும் Switch on செய்யவும். அதற்கு பிரச்சினை தீரவில்லை என்றால் அப்பிள் நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட இன்னோர் வழி உள்ளது.

ஐ போனின் மேல் பகுதியில் உள்ள Sleep பொத்தானையும், கீழ் பகுதியில் உள்ள Home பொத்தானையும் ஒரே நேரத்தில், போன் Switch off ஆகி மீண்டும் திரையில் அப்பிள் லோகோ தோன்றும் வரை அழுத்திப் பிடிக்கவும்.

அவ்வளவும் தான், பிரச்சினை தீர்ந்துவிடும்.

No comments:

Post a Comment