கணினி
துறையில் தனக்கென்று ஒரு தனி உயரிய முத்திரையைப் பதித்திருக்கும் லெனோவா
அருமையான புதிய கணினி சாதனங்களை புதுமையான முறையில் அடிக்கடி களமிறக்கிக்
கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்நிறுவனம் உலகிலேயே மிகவும்
சிறிய ஒரு மேசைக் கணினியை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த
புதிய மேசைக் கணினி இரண்டு மாடல்களில் வருகிறது. மேலும் இந்த கணினிகளுக்கு
திங்க்சென்டர் எம்72இ மற்றும் திங்க்சென்டர் எம்92பி என்ற பெயர்கள்
சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த சிறிய கணினிகள் ரூ.23,500க்கு விற்பனையாக
இருக்கின்றன. ஆனால் வரி மற்றும் இயங்கு தளம் ஆகியவை இந்த விலைக்குள்
அடங்காது. மாறாக அதற்காக தனியாக செலவழிக்க வேண்டும்.
குறிப்பாக
சிறிய அளவில் வரும் கணினி சாதனங்களுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு
இருப்பதாலும் மற்றும் அத்தகைய சிறிய கணினிகளை நிறுவ சிறிய அளவு இடம்
மட்டுமே தேவைப்படுவதாலும், தாம் இப்படிப்பட்ட சிறிய மேசைக் கணினிகளைத்
தயாரித்து வழங்க இருப்பதாக லெனோவா கூறியிருக்கிறது.
லெனோவாவின்
இந்த புதிய சிறிய கணினிகளுக்கு மக்கள் எந்த அளவிற்கு வரவேற்பு அளிக்கப்
போகிறார்கள் என்பதை காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.
No comments:
Post a Comment