Digital Time and Date

Welcome Note

Monday, July 23, 2012

நபி மொழிகள் சில





635. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் 'உங்களுக்கு என்ன? (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)" என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு '(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்' என்று பதில் கூறினர். 'அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி ) Volume :1 Book :10




636. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :10



தொழுகைகக்காக இகாமத்து சொல்லப்பட்டுவிட்டால் (எந்த) ஃபர்ளான தொழுகைக்காக இகாமத்து சொல்லப்பட்டு விட்டதோ அதைத்தவிர (வேறு) தொழுகை இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா (ரலி ) அவர்கள் கூறுகிறார்கள்.
(முஸ்லிம் : ஹதீஸ் எண் : 263 )




691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :10




934. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :11



1163. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்'.
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :19



177. 'காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :4




751. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். 'ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி ) Volume :1 Book :10



597. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை."
"என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக" (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
(புஹாரி ) Volume :1 Book :9



822. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது."
என அனஸ்(ரலி) அறிவித்தார்
(புஹாரி ) Volume :1 Book :10


நீங்கள் ஸஜ்தா செய்யும்போது ஒட்டகம் அமர்வது போல அமர வேண்டாம்
உங்கள் முழங்கால்களை (தரையில் ) வைப்பதற்கு முன் பாக உங்கள் கரங்களை
வையுங்கள் என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

ஆதாரம் :: ( திர்மிதி )

No comments:

Post a Comment