Digital Time and Date

Welcome Note

Friday, August 31, 2012

இன்று உலகில் மிகவும் பிரசத்தி பெற்ற குளிர் பானங்களில் கோகோ கோலாவும் ,பெப்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதுஎவ்வாறு ?.


இன்று உலகில் மிகவும் பிரசத்தி பெற்ற குளிர் பானங்களில் கோகோ கோலாவும் ,பெப்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் விற்பனையில் இதன் சிகரம் வானுயர எட்டிருக்கும் சாதனை எந்த குளிர்பானத்தினாலும் எட்டமுடியாத நிலையும், நெருங்கிட முடியாத நிலையும் அதிக வருமானமும் பெற்று பெரும் அந்தஸ்துடன் நிலைத்து நின்றுக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் (National Institute of Consumption) ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 19 விதம் விதமான கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் 10 பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம். கோகோ கோலா, பெப்சி கோலா, கோகோ கோலா கிளசிக்ஸ், லைட் மற்றும் கொக் ஸீரோ உள்ளிட்ட பானங்களிலேயே ஆல்கஹால் சேர்ந்திருப்தாக தெரிவிக்கப்படுகிறது. கோரா மற்றும் மேன் யூ சோலர் உள்ளிட்ட சில பானங்களில் ஆல்கஹால் சேர்ந்திருக்கவில்லையெனவும் குறித்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த சோதனை முடிவுகளை '60 Million Consumer' என்ற பிரெஞ்சு Magazine, தனது சமீபத்திய பதிப்பில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கோகோ கோலாவின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும் என்கிறார்.

இந்திய நாட்டில் இதன் குளிர்பான குடிப்பழக்கம் சற்றுக்குறைந்தாலும் அரபு நாடுகளிலே தினசரி வாழ்க்கையில் அங்கம் வகித்து நிலைப்பெற்று வருகிறது. ஆய்வின் முடிவுகளையடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனெனில் பெரும்பாலான முஸ்லிம்கள் கோலா பானங்களை அருந்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த கோலாவில் சேர்க்கும் நச்சு கலந்த அமிலம் கேன்சரை உண்டு செய்யும், சிறுக சிறுக உள் எலும்புகளை அரித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு பெப்சி, கோலா கூடிய கண்ணாடி அல்லது சில்வர் தம்ப்ளரில் சிறுத் துண்டு இரும்பை அதில் போட்டு இரண்டு நாட்கள் கழித்துப்பார்த்தால் நாம் பருகும் இந்த குளிர்பானம் அந்த இரும்பு துண்டை எந்த அளவுக்கு அரிப்பு செய்திருக்கிறது,அறிப்புத்தன்மையுடைய சக்தி எந்த அளவுக்கு உள்ளது என்பது நமக்கு தெளிவாகும் .

இந்தக் குளிர்பானகள் மனிதனை நோயை உருவாக்கி உயிரை மாய்க்க வந்த பேராயுதமாக காட்சியளித்தாலும், இதனை அறிந்தும் பருகாதவர்களே இல்லை என கூறும் அளவிற்கு பெரும்பாலும் இதனின் தாக்கம் அதிகரித்திருப்பது வேதனை அளிக்கிறது .

இனி கோகோ கோலா, பெப்சி போன்ற பானங்களை அருந்துவதில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு மோகத்தில் இதை அருந்துவதை தவிர்த்து உடல் நலம் பேணுவோமாக.


அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (2:195)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்;
ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)


இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள். (25:73).


மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

”நிச்சயமாக ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டு விட்டது” ஹராம் (விலக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுவிட்டது. இவை இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான பல உள்ளன. மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி அறியாமாட்டார்கள்.
எவர் சந்தேகத்திற்கிடமானதை விட்டுவிட்டாரோ அவர் தான் மார்க்கத்தையும், தன் மானத்தையும் காத்துக் கொண்டார். எவர் சந்தேகத்திற்கிடமானதில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராமில் விழுந்து விடுகிறார்.
எப்படியென்றால் மேய்ப்பாளன் (தனது ஆடுகளை) வேலி வேயப்பட்ட வயல்களை சுற்றி மேய்க்கின்றான். அப்போது (அந்த ஆடுகள் வேலியைத் தாண்டி வயலில்) இறங்கி விடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு வேலியுண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வினால் வேலி வேயப்பட்ட வயல்கள் அவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களாகும். அறிந்து கொள்ளுங்கள்!
நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுவதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். நுஃமான் இதைக் கூறும்போது தமது இரண்டு காதுகளின்பால் தமது இரண்டு விரல்களைக் கொண்டு சென்றார். (புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வே மிக அறிந்தவன்...!

http://www.ndtv.com/article/world/coke-and-pepsi-contain-alcohol-claims-french-study-237145

http://www.dailymail.co.uk/news/article-2165422/Coke-Pepsi-contain-tiny-traces-alcohol-reveals-French-research.html

No comments:

Post a Comment