Digital Time and Date

Welcome Note

Friday, August 17, 2012

சவூதி அரேபியாவில்கூடிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மியன்மார் குறித்து ஆராய்வு

57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு செவ்வாய்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் ஆரம்பமானது. இதில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் உட்பட இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆரம்பமான மாநாட்டில் சிரியா மற்றும் மியன்மாரில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விசேட கவனம் செல
ுத்தப்படுவதாக இக்சானொக்லு குறிப்பிட்டார். மியன்மாரில் தொடரும் இன வன்முறையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த கூட்ட மைப்பின் அவசர கூட்டமாகவே இந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டுக்கு சவூதி மன்னர் அப்துல்லா இம்மாத ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமைக் கப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு முன்னர் 1997 (பாகிஸ்தான்), 2003 (கட்டார்), 2005 (சவூதி) ஆகிய ஆண்டுகளிலும் அவசர கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் நாடுகளில் அரசியல் பதற்றம், வன்முறைகளுக்கு மத்தியிலேயே இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment