Digital Time and Date

Welcome Note

Sunday, September 23, 2012

இண்டலிஜன்ஸ் தீவிரவாத அறிக்கைகளின் பின்னணியில் ஹிந்துத்துவா ப்யூரோக்ரேட்ஸ்!



முஸ்லிம் இயக்கங்களின் மீது தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாடும் இண்டலிஜன்ஸ் அறிக்கைகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளான ப்யூரோக்ரேட்ஸ் (ஆட்சி, அதிகார மட்டங்களில் பணியாற்றியோர்) இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) இயக்குநர் அஜித்குமார் டோவல் தலைமை வகிக்கும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடை

ய விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசனின் பணியாற்றும் முன்னாள் பீரோக்ரேட்டுகள் தாம் முஸ்லிம்களுக்கு எதிரான இண்டலிஜன்ஸ் மற்றும் அரசு நடவடிக்கைகளின் பின்னணியில் செயல்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதும் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் தான் என்பது குறித்து ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பவுதீக் பிரமுக் ஏமகனாத் ரானடே 1972-ஆம் ஆண்டு நிறுவிய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தின் கீழ் டெல்லியில் ஹிந்துத்துவா அறிவுஜீவிகள்(?) மற்றும் ப்யூரேக்ரேட்ஸின் அமைப்பான விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசன் இயங்குகிறது.

கேரளாவைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் தத்துவவாதி பி.பரமேஷ்வரன் என்பவர் தற்பொழுது விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசனின் தாய் அமைப்பான விவேகானந்தா கேந்திராவின் தலைவராக உள்ளார்.

நரசிம்மராவ் பிரதமர் பதவியை வகிக்கும்பொழுது டெல்லி சாணக்யபுரியில் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் விவேகானந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசனின் தலைமையகம் அமைந்துள்ளது. மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் முன்னாள் இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) தலைவர்கள், இந்திய உளவுத்துறையான ‘ரா’வின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் ராணுவ தளபதிகள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர்கள், முன்னாள் இந்திய தூதர்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் விவேகான்ந்தா இண்டர்நேசனல் ஃபவுண்டேசனின் தலைமை பதவிகளில் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய பாதுகாப்பு, உளவுத்துறைகளில் பணியாற்றும் இந்த அதிகாரிகளின் பதவி காலக்கட்டத்தில் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிரான தீவிரவாததொடர்பு குற்றச்சாட்டை கூறும் இண்டலிஜன்ஸ் அறிக்கைகள் அதிகமாக வெளியாகின. இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு சிறையில் அடைப்பட்டனர்.

மலேகானில் இரண்டு குண்டுவெடிப்புகள், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியவற்றின் பின்னணியில் இயங்கியது ஹிந்துத்துவா அமைப்புகள் தாம் என்பது சுவாமி அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்த சதித்திட்டத்தின் விளைவாக நிகழ்ந்த குண்டுவெடிப்புகளின் பெயரால் இந்தியாவில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment