தனக்குப் பிடித்தவரைக் கணவனாகதேர்வு செய்ய பெண்ணிற்குஇஸ்லாத்தில் உரிமைவழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடையவிருப்பமில்லாமல் நடத்தப்படும்திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை, அவளது(வெளிப்படையான)
உத்தரவுபெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும்
ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்''
என்றுசொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின்
அனுமதி(யைத்தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயக்ம்
(ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (5136)
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள்.எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)
நூல் : புகாரி (5138)
பெண்கள் விரும்பினால் அவர்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வுசெய்வதற்கும் பெண்களுக்கு பிடிக்காவிட்டால் மறுப்பதற்கும் பெண்களுக்கு உரிமைஉண்டு.

No comments:
Post a Comment