Digital Time and Date

Welcome Note

Tuesday, October 9, 2012

பெண்களும் விளம்பரங்களும்!


நுகத்தடியில் அழுந்தி கிடக்கும் பெண்மை
ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான்.. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.

இப்போது ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கின்றது. திரும்பிய இடங்களிளெல்லாம் விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றது. அது "எப்போதும் சளைக்காதவர்களுக்கு" அதில் ஒரு கிழவன் ஓரக்கண்ணால் ஒரு இளம்பெண்ணை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கின்றான்

கீழே போட்டிருக்கின்றார்கள் "சில எஞ்சின்கள் எப்போதும் சளைப்பதில்லை எப்போது சளைக்காதவர்களுக்கு ''ELF OIL'' விளம்பரம் முடிகின்றது. சாதரன ஆயில் விளம்பரத்துக்கு இவ்வளவு மோசமான உவமை காட்டப்பட்டு இருக்கின்றது.

இந்த விளம்பரம் ஒரு மிக மிக சாதாரண விஷயமாகிவிட்டது.சாலையில் வரும் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட யாவரிடமுமே எந்த கோபத்தையுமே சொல்லிக் கொள்ளும்படி ஏற்படுத்தவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரம் மழை வந்து கொண்டிருக்கிறது ஒரு பெண் குடையில் இருக்க மற்றொருவனோ குடைக்கக காத்து பின்னர் பிஸ்கெட்டை காட்டுகிறான் உடனே அப்பெண் அவனோடு சிரித்துக்கொண்டு ஒன்று சேர்வதை போல் முடிகிறது,

ஆணின் பெருமையானது பெண்களை கவர்வதாகவே காட்டப்படுகின்றது. பெண்ணின் பெருமையானது ஆண்களை கவர்வதற்காகவே என்று காட்டப்படுகின்றது. பேர் அண்டு லவ்லி விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரே பல்லவி தான் நீ கருப்பாய் இருக்கிறாய் தன்னம்பிக்கை கிடையாது, மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாய் நாட்டுக்கு ஆண்களுக்கு தேவை.

ஒரு எஞ்சினின் தரத்தை நிரூபிக்க, ஒரு வண்டியின் தரத்தை நிரூபிக்க பெண்ணின் உடல் தேவைப்படுகின்றது, பலவிளம்பரங்களின் தன்மையே ஆண்மையை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றன. சமயல் எண்ணை முதல் பெனாயில் வரை பெண் தான் விளம்பர மாடல்.பிஸ்கெட் தந்தால் போதும் வண்டியின் அழகை பார்த்தால் போது ஒரு பெண் தன்னையே தந்து விடுவாள் அவளுக்கு தேவை எல்லாம் ஒரு ஆண் தன் ஆண்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும். உன் வாய் நாறாமல் வாசமடித்தால் பெண் போலீசு கூட உன் வலையில் தான்...

சமூகத்தில் நடப்பதே ஊடகங்களிலும் தொடர்கின்றது. பெண்ணடிமைத்தனத்தை பேசும் பத்திரிக்கையின் ஒரு பக்கம் மறுபக்கமே ஆபாசபடங்களை போட்டு தனது பெண்ணுரிமை பேணும் விதத்தை சொல்கிறது, கேரள அமைச்சர் ஒருவர் நடிகையிடம் தொந்தரவு செய்ததை சமீபத்தில் கண்டோம்.

சில மாதத்துக்கு முன் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது. காதலிக்க மறுத்த மாணவியின் மீது ஆசி ஊற்றிய மாணவன், காதலிக்க மறுத்த் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூரன், ஏன் கயர் லாஞ்சி உள்ளிட்ட சாதி வெறித்தாக்குதலில் கூட பெண்கள் தான் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டனர்.

எப்படி இந்த சுமூகத்தில் "பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது" போன்றவை ஜனனாயகமாக காட்டப்பட்டதோ அப்படித்தான் ஆணுக்கு பெண் அடிமையாய் இருப்பது நியதியாக்கப்படுகின்றது. ஒரு பேருந்து முழுக்க செல்லும் பெண்களை கூட சாலையில் உள்ள மூவர் கத்தி சத்தமாக கிண்டலடிக்கமுடியும். ஆனால் அது எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகாது.

தாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலாக மற்ற ஆண்கள் கொடுமைகள் செய்யும் போது பெண்களை அமைதியாய் இருக்க வைத்தது எது? சாதிவெறியை தாண்டி பெண்ணடிமைத்தனம் நீடிக்கிறது. அது தான் சினிமாவில் பெண்கள் ஆபாசப்படுத்தப்படும் போதும் ஊடகங்களில் மோசமான விளம்பரத்தையும் கண்டு அமைதியாயிருக்கிறது இருக்க வைக்கிறது.

ஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான். இப்படித்தான் தன் ஆண்மையின் பலத்தினை அக்கிழவன் பெண்ணிடம் காட்ட விரும்புவதே அந்த ஆயிலின் த்குதியாக மாற்றப்பட்டது. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.

எல்ப் ஆயிலின் விளம்பரம் தான் முதல் பெண்ணடிமைத்தனமான விளம்பரம் எனில் தானே எதிர்ப்புகள் புதியதாய் கிளம்புவதற்கு, பல்லாண்டுகளாக பெண் நுகர்பொருளாக நீடிப்பது இன்று வரை தொடர்கின்றது. இன்று வரை, ஆணாதிக்கம் வரைமுறையின்றி பெண்கள் மேல் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது. பெண்ணியம் பேசும் பலரும் அழகியலின் ரசவாதத்துக்குள் புகுந்து அதில் மறைந்தே போய்விட்டனர். அரசின் ஆதரவு ஆணாதிக்கத்துக்கு நீடிக்கும் வரை பெண்ணடிமைத்தனம் ஓயப்போவதில்லை.

அரசின் ஆதரவினை எதிர்க்காது சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போடாது சிலரைப்போல் குடும்பக்கதையையும் பக்கத்து வீட்டுகதையையும் பேசி கொண்டிருப்பதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. பெண்கள் அரசியல் ரீதியிலான ஐக்கியம் சாத்தியமாகும் வரை, பெண்கள் இப்போது சொல்லப்படும் பெண்மையாய் நீடிக்கும் வரை ஆணாதிக்கத்தின் நுகத்தடி பெண்ணினத்தை அழுத்திக்கொண்டே இருக்கும்.

எ.சி.எம்.கடாபி
இஸ்லாமிய ஆய்வு மையம்
வாழைச்சேனை
இலங்கை.

No comments:

Post a Comment