Digital Time and Date

Welcome Note

Friday, November 30, 2012

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டையிலிருந்து இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்

12 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட கருமுட்டை மூலம் கருத்தரித்த அர்ஜென்டினா பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸைச் சேர்ந்தவர் மோனிகா ஜபோடாக்ஸ்னி(45). அவரது கணவர் கில்லர்மோ ஹூசக். இயற்கையாக கருத்தரிக்க முடியாத மோனிகா செயற்கை முறை மூலம் கருத்தரிக்க முயன்று பல தடவை தோல்வியையே சந்தித்தார். இனி தான் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.
அப்போது கடைசி முறையாக செய்து பார்ப்போம் என்று மோனிகா தான் 33 வயதாக இருந்தபோது ஆய்வகத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்ட கருமுட்டை கடந்த ஆண்டு பயன்படுத்தினார். அவரது இறுதி முயற்சி இரட்டைப் பலனைக் கொடுத்தது. அவருக்கு கடந்த ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலம் மெர்சிடீஸ், குவாடலூப் என்னும் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து தான் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுகள் ஆக ஆக கருமுட்டை சேதமடையலாம் என்னும் நிலைமையில் மோனிகா 12 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட கருமுட்டையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்படு குணமடைந்தவர்கள் மற்றும் வேலையில் கவனம் செலுத்த கர்பத்தை தள்ளிப்போடும் பெண்களுக்கு இந்த செய்தி ஒரு இனிய செய்தியாகும்.

No comments:

Post a Comment