Digital Time and Date

Welcome Note

Friday, November 2, 2012

வரலாற்றில் இன்று

1570: வடகடலில் ஏற்பட்ட பாரிய அலைகளினால் ஹொலண்ட் மற்றும் ஜுட்லன்ட் தீவுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

1895: அமெரிக்காவில் பெற்றோலிய எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கிடையிலான முதலாவது பந்தயம் நடைபெற்றது. (முதல் பரிசு : 2000 டொலர்கள்).

1898: விளையாட்டுப் போட்டிகளின்போது அணிகளை உற்சாகமூட்டும் சியர்லீடிங் கலை அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1914: ஒட்டோமான் இராஜ்ஜியம் மீது ரஷ்யா யுத்தப் பிரகடனம் செய்தது.

1953: பாகிஸ்தானை இஸ்லாமிய குடியரசாக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்தது.

1963: தெற்கு வியட்னாம் ஜனாதிபதி என்கோ டின் டியெம், இராணுவப் புரட்சியொன்றின் பின் கொல்லப்பட்டார்.

1964: சவூதி அரேபிய மன்னர் சௌத் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத், குடும்பப் புரட்சியொன்றின் மூலம் நீக்கப்பட்டு, அவரின் சகோதரர் பைஸால் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.

1964: தென்கொரிய சியோல் நகரில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 78 பேர் பலி.

1995: தென்னாபிரிக்காவில் நிறவெற கால ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் மக்னஸ் மலன் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் 10 பேர் 1987 ஆம் ஆண்டு 13 பேரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

2007: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.


1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment