Digital Time and Date
Welcome Note
Monday, November 19, 2012
சில இனிய தகவல்கள்
நாம் உண்ணும் சாதம் செரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. பால் செரிக்க இரண்டு மணி நேரம் ஆகிறது. நெய் ,வேக அவித்த முட்டை,மாமிசம் செரிக்க நான்கு மணி நேரம் ஆகிறது.
********
மது அருந்தினால் சிலருக்கு தைரியம் வரும். அதற்கு Dutch courage என்று பெயர்.
********
இப்போது உலகமெங்கும் உபயோகப் படுத்தப் படும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர். இது 1582ல் இத்தாலியில் போப் கிரிகேரி13 என்பவரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது.
********
உலகம் தோன்றியது முதல் எந்தவித பரிணாம வளர்ச்சியும் இல்லாத உயிரினம் கரப்பான் பூச்சி.
********
நிறக்குருடு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வித்தியாசப் படுத்தி சொல்ல முடியாது.
********
ஒரு பிராணியைப் பார்த்தவுடன் அதன் காது வெளியே தெரிந்தால் அது குட்டி போடும் என்றும் காது வெளியே தெரியவில்லை என்றால் அது முட்டையிடும் என்றும் அறியலாம்.
**********
கிரேக்க நாட்டில் யூரல் மலைப் பகுதியில்'ஆஸ்பெட்டாஸ்'என்ற நகரம் உள்ளது.இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது. இந்த நகரின் பெயராலேயே கல்நாருக்கு'ஆஸ்பெட்டாஸ்'என்ற பெயர் வந்தது. கிரேக்க மொழியில் ஆஸ்பெட்டாஸ் என்றால் அழிக்க முடியாதது என்று பொருள்.
********
மத்தாப்பு மற்றும் வான வெடிகளில் வித விதமான வர்ணங்கள் தோன்ற வெடி மருந்துடன் பல்வேறு உலோக உப்புகளைச் சேர்க்கிறார்கள்.
நீலம்-- காப்பர்
பச்சை--பேரியம்.
மஞ்சள்--சோடியம்.
சிவப்பு--ஸ்ட்ரோண்டியம்.
********
55அடிக்குக் குறைவான எந்த அறையிலும் எதிரொலி கேட்காது. காரணம்: காற்றில் ஒலி பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு 1100அடி. இதில் பத்தில் ஒரு வினாடி தூரத்தில் உள்ள ஒலிகளை மட்டும் நம் காது இனம் பிரித்துக் கேட்கும் இயல்புடையது.வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒலி செல்வது 110அடி. எதிரொலிக்க வேண்டும் என்றால் ஒலி அதில் பாதியில் மோதித் திரும்ப வேண்டும்.110ல் பாதி 55அடி.ஆகவேதான் அதற்குக் குறைவான நீளமுள்ள அறையில் எதிரொலி கேட்பதில்லை.
********
Labels:
g k
Subscribe to:
Post Comments (Atom)
thanks 4 good information
ReplyDelete