நவம்பர் 27
1895:
தனது சொத்துக்களில் 94 சதவீதம் நோபல் பரிசை ஏற்படுத்துவதற்கு
பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தனது கடைசி உயிலில் அல்பிரட் நோபல்
கையெழுத்திட்டார்.
1944: பிரித்தானிய விமானப்படை ஆயுதக் களஞ்சியமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 70 பேர் பலி.
1964:
அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்துமாறும் ஆயுதக்களைவை ஆரம்பிக்குமாறும்
அமெரிக்கா, சோவியத் யூனியனிடம் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு கோரினார்.
1975: கின்னஸ் சாதனை நூல் ஸ்தாபகரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ரோஸ் மெக்வேர்டர் லண்டனில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1983: ஸ்பெய்னின் மட்ரிட் நகருக்கு அருகில் விமானம் வீழ்ந்ததால் 181 பேர் பலி.
1999: நியூஸிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக ஹெலன் கிளார்க் தெரிவானார்.
2005: உலகின் முதலாவது பகுதியளவு முகமாற்றுச் சிகிச்சை பிரான்ஸில் நடைபெற்றது.
2006:
ஐக்கிய கனடாவுக்குள் கியூபெக் ஒரு தேசமாக இருக்குமென்ற பிரதமர் ஸ்டீபன்
ஹார்பரின் முன்மொழிவை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது.
No comments:
Post a Comment