Digital Time and Date

Welcome Note

Friday, November 9, 2012

உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்! உடல் தடிப்புகள் உருவாகும்!



உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும். உடல் தடிப்புகள் உருவாகும். உதடு வீங்கும். மூச்சு வாங்கும். அலர்ஜி என்பது எல்லா வயதிலும் வரும். அலர்ஜியை குணப்படுத்த முடியும். சில அலர்ஜிக்கு 3 நாள் சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். 3 மாதம், 9 மாதம், ஒரு ஆண்டு கூட சிகிச்சை பெறவேண்டியது இருக்கும். எந்த உணவுகளை உட்கொண்டால் அலர்ஜி ஏற்படுகிறதோ அதனை உட்கொள்ள கூடாது.

காலை எழுந்தவுடன் விடாது தும்மல்.... கண்களில் தொடர்ந்து நீர் வடிதல்....இவை எல்லாம் அலர்ஜியின் அடையாளங்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அலர்ஜி பாதிப்பு அதிகம் என நம்பிக்கொண்டிருந்த காலம் போயே போச்சு. இப்போது இந்திய மக்கள் தொகையில் 25 சதவீத மக்கள் ஏதாவது ஒரு அலர்ஜி பாதிப்புக்கு ஆளாகின்றனர் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உணவு பொருட்கள் மூலம் ஏற்படும் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்களில் 30 ஆயிரம் பேருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 100 முதல் 200 பேர் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை பெறமுடியாமல் இறந்து விடுகின்றனர். அலர்ஜி ஒரு நோயா...எப்படி எப்படி ஏற்படுகிறது. விளக்குகிறார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் மன்வீன்கார்.

அலர்ஜி என்பது நோய் அல்ல. அது உடலில் ஏற்படுத்தும் திடீர் மாற்றம். இதற்கு பிரதான காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை. சில உணவுவகைகளை உட்கொண்டால் உடம்பில் தழும்புகள் போல் காணப்படும். இது அலர்ஜியாகும். மீன் வகையில் பிரான்ஸ் உட்கொண்டால் சிலருக்கு சேராது. உடலில் தடுப்புகள் ஏற்படும். கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு ஒத்து வராது. பெரும்பாலனவர்களுக்கு மாத்திரை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். பூச்சி கடித்தாலும் உடலில் அரிப்பு ஏற்படும்.

இதுவும் அலர்ஜிதான். வெயில் உடலில் பட்டால் சிலருக்கு முகம், கை ஆகியவற்றில் வட்டவடிவில் தழும்பு ஏற்படும். பூக்களில் உள்ள மகரந்த து�ள் காற்றில் பரவி உடம்பில் பட்டால் அலர்ஜி உருவாகும். உதாரணமாக பார்த்தீனிய செடியின் பூக்களில் இருந்து மகரந்த தூள் காற்றில் பரவி அது உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும். தண்ணீர் குடித்தாலும் அலர்ஜி வரும். அதனை தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபதாகிவிடும். அலர்ஜியால் உடம்பில் கொப்பளம் போல் உருவாகும். அது வெடித்து புண்ணாகி அரிப்பு ஏற்பட்டு சீல் உருவாகி ஜூரம் ஏற்படும். இப்படி பலதரப்பட்ட நோய்கள் உருவாகும். எனவே உடம்பில் தடிப்போ, அரிப்போ, திட்டு திட்டாக உருவாதல், கொப்பளம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற்றால் இதற்கு நிரந்த தீர்வு காணமுடியும்.

No comments:

Post a Comment