Digital Time and Date

Welcome Note

Sunday, November 4, 2012

ஈரான் வேவுவிமானம் இஸ்ரேல் ராடருக்கு மண் தூவியது !

இதுவரை காலமும் உலகில் , மற்றைய நாடுகளின் எல்லைக்குள் அத்துமீறி நுளையும் நாடு எது என்று கேட்டால் சில நாடுகளை குறிப்பிட முடியும். அமெரிக்கா, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளே இவ்வாறு பிற நாடுகள் மீது போர் தொடுப்பது வேவு பார்ப்பதும் வழக்கம். இதில் இஸ்ரேல் அமெரிக்காவின் துணையுடன் செயல்படுவதால், துணைக்கு ஆள் இருப்பதால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும். ஈரானை நாம் எந்
த நேரமும் தாக்குவோம், என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் அடிக்கடி மிரட்டி வருவதும், ஈரானில் உள்ள அணு உலையின் படங்களை எடுத்து அன்நாட்டை மிரட்டுவது, இவ்விரு நாடுகளுக்கு ஒரு பொழுதுபோக்கவே அமைந்துவிட்டது எனலாம். பின்நேரங்களில் பொழுதுபோகவில்லை என்றால், ஈரான் அளவுக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுகிறது என்று ஸ்டேட்மன் விடுவார் ஓபாமா. இல்லை என்றால், அமெரிக்கவில் அவருக்கு சாதகமான நிலை இல்லை என்றால், ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடத்தி, மீண்டும் அமெரிக்காவின் கதாநாயகனாக மாறுவார் ஒபாமா. இது தான் காலாதி காலமாக நடக்கிறது.

ஆனால் சமீபத்தில் ஈரானில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமது நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் ஆபத்து இருப்பதை உணர்ந்து தம்மை தொழில் நுட்பத்தில் வளர்த்துகொண்டு உள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க வேவு விமானம் ஒன்று ஈரான் வான் பரப்பில் பறந்தது. அதனை சுட்டு வீழ்த்தாமல் அப்படியே அதன் கன்ரோலை தாம் கையில் எடுத்து அந்த விமானத்தை வெற்றிகரமாக தனது நாட்டில் தரையிறக்கினார்கள். தற்போது இதற்க்கும் மேலே ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதாவது ஈரான் நாட்டு தயாரிப்பான வேவு விமானம் ஒன்று, இஸ்ரேல் நாட்டிற்குள் சென்று, அன்நாட்டின் ராடர் திரைகளில் மண்ணைத்தூவிவிட்டு, இராணுவத் தளங்களை படம் எடுத்துள்ளது. நீங்கள் மட்டும் தானா எங்கள் நாட்டிற்குள் வந்து படம் எடுப்பீர்கள் ? எங்களாலும் முடியும் என்று ஈரான் சவால் விட்டுள்ளது.

இன்றைய தினம் கிஸ்புல்லா அவர்கள், தம்மிடம் இஸ்ரேல் விமானத் தளங்கள், இராணுவத் தளங்களின் புகைப்படங்கள் இருப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். முதல்தடவையாக தம்மிடம் உள்ள வேவு விமானத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இஸ்ரேல் ஆடிப்போயுள்ளது. காரணம் ஈரானிடம் உள்ள வேவு விமானங்கள், சாதாரண அளவைக் காட்டிலும் பெரியவை என்றும், அவை ராடரில் அகப்படாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தாம் எடுக்கும் புகைப்படங்களை அது உடனுக்குடன் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பிவைக்கும் திறன்கொண்டது. இது தான் இந்த விமானத்தில் முக்கியமான பார்ட். ஏன் எனில் விமானம் பறப்பில் ஈடுபடும்போது தன்னை ராடர் திரைகளில் இருந்து உருமறைப்புச் செய்துகொள்ளும். ஆனால் அது எடுக்கும் புகைப்படங்களை அது, அனுப்ப முயற்சிக்குபோது உண்டாகும் அலைக்கற்றைகள், இல்லையேல் சட்டலைட் தொடர்பாடல்கள், விமானத்தைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆனால் ஈரான் விமானத்தில் அதி நவீன கருவிகள் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment