Digital Time and Date

Welcome Note

Tuesday, November 6, 2012

வரலாற்றில் இன்று.

 நவம்பர் 06


1789: அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக அருட்தந்தை ஜோன் கரோலை பாப்பரசர் 6 ஆம் பயஸ் நியமித்தார்.


1913: தென்னாபிரிக்காவில் இந்திய சுரங்கத் தொழிலாளர்களின் பேரணிக்குத் தலைமை தாங்கிய மகாத்மாக காந்தி கைது செய்யப்பட்டார்.


1941: சோவியத் யூனியன் அதிபர் ஜோஸப் ஸ்டாலின் தனது 3 தசாப்தகால ஆட்சியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜேர்மனியின் தாக்குதலால் 350,000 படையினர் உயிரிழந்ததாகவும் ஆனால், 45 லட்சம் ஜேர்மன் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெற்றி நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


1943: சோவியத் யூனியன் படைகள் கீவ் (உக்ரேன்) நகரை மீண்டும் கைப்பற்றின.


1944: அமெரிக்காவின் ஹன்பார்ட் அணுஉலையில் முதல்தடவையாக புளுட்டோனியம் தயாரிக்கப்பட்டது. பின்னர், இப்புளுட்டோனியம் ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.


1962: தென்னாபிரிக்க நிற வெறி ஆட்சியைக் கண்டித்து ஐ.நா.பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.


1965: அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் கியூப நாட்டவர்களை விமானம் மூலம் கொண்டுசெல்வதற்கு இரு நாடுகளும் இணங்கின. 1971 ஆம் ஆண்டளவில் 250,000 கியூப நாட்டவர்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்திருந்தனர்.


1986: பிரிட்டனில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தொன்றில் 45 பேர் பலியாகினர்.

No comments:

Post a Comment