Digital Time and Date

Welcome Note

Sunday, November 25, 2012

மனிதனுக்கு அஞ்சும் காட்டுவாசிகள் !!!




எந்த ஒரு வசதியும் இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் நூறு சதவீதம் இயற்கையோடு இயற்கையாக வாழும் நூற்றுக்கனக்கான பழங்குடியினர் இருக்கிறார்கள்.குகைகளில் வசித்து விலங்குகளை வேட்டையாடும் பழங்குடி மக்கள் பலர் இன்னமும் சமைக்கத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். நெருப்பை பற்றி தெரியும் என்றாலும், அதை வைத்து சமைக்க தெரியாது. அதேபோல் அவர்கள் உலகத்தோடு ஒட்டி உறவாடவும் விரும்புவது இல்லை. அந்தமான் நிகோபர் தீவுகளில் சென்டினல் என்ற தீவில் வசிக்கும் சென்டினலீஸ் பழங்குடி மக்கள் இதுவரைக்கும் தங்கள் அருகில் யாரையும் நெருங்கவிட்டதே இல்லை.

நாகரீகத்தையும் நவின உலகத்தையும் கற்றுத்தருகிறோம் என்று வெளியில் இருந்து காட்டுக்குள் செல்பவர்காளாலும் காட்டு மனிதர்ளுக்கு ஆபத்து உண்டு. காட்டில் ஏற்படும் எவ்வளவோ கொடூரமான வியாதிகளில் பிழைத்துக் கொள்ளும் இவர்களால் நாகரீக மனிதர்களால் ஏற்படும் சாதாரண நோய்களைகூட தாங்கிக் கொள்ள முடிவதில்லை. உதாரணமாக நாகரீக மனிதன் மூலம் பரவிய ஜலதோஷத்தை கூட தாங்கமுடியாமல் காட்டு மனிதர்களின் உயிர் பறிபோய் விடுகிறது. இதனாலே நாகரீக மனிதர்கள் அவர்களுக்கு ஆகாதவர்களாக இருக்கிறார்கள்.

பிரேசில் அமேசான் நதிக்கு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களை புகைப்படம் எடுக்க ஹெலிகாப்டரில் சென்றார், புனாய் என்ற போட்டோ கிராபர். அந்த மக்களின் வசிப்பிடத்திற்கு மேல் ஹெலிக்காப்டர் பறந்தபோது அதை ஏதோ பெரிய ஆபத்தான பறவை என்று நினைத்த காட்டுவாசிகள் அதை நோக்கி சரசரவென அம்புகளை விட்டனர். அதையும் தவற விடாமல் போட்டோ எடுத்து வந்த புனாய் பத்திரிகைகளில் வெளியிட, அந்தபகுதி மிகவும் பிரபலமானது.

இப்போது பத்திரிக்கையாளர்கள் அந்தப்பகுதியை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்டு விலங்குகளிடம் இருந்து தப்பிக்கத் தெரிந்த இந்தகாட்டுவாசிகளுக்கு நவீன மனிதர்களிடம் இருந்து தப்பிக்க தெரியவில்லை. காங்கோ காடுகளின் குகைகளில் வசிக்கும் பிக்மி என்ற பழங்குடியினருக்கு வேட்டை தான் பிரதான தொழில். வேட்டையை தவிர அவர்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது.

ஆனால் மற்ற ஆதிவாசிக் கூட்டத்துக்கும் இவர்களுக்கும் சண்டை ஏற்படும் சூல்நிலை வந்தால், உடனடியாக முதல் வேலையாக வெள்ளைக்கொடி காட்டி சமதானமாகி விடுவார்கள். இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டுக்கு போய்வர பிரான்சில் இருந்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மட்டும் ஒரே ஒரு விமானம் உள்ளது. காங்கோ காடு பிரான்சைத் தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டுடனும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொளள வில்லை. இப்படி இருந்தும் கூட இந்த அப்பாவி காட்டுவாசிகளான பிக்மியை காங்கோ வீரர்கள் வேட்டையாடி உண்பார்களாம். காங்கோ இன மக்களின் வேட்டையாடும் விலங்குகல் பட்டியலில் இந்த பிக்மி இனமும் இடம் பெற்றிருக்கிறது

No comments:

Post a Comment