1949இல்
அமெரிக்காவை முதன் முதலில் கண்டுபிடித்தது கொலம்பஸ் என்று வரலாறு
குறிப்பிடுகிறது. அதே வரலாறு தான் கொலம்பஸ் முதன் முதலாக அமெரிக்காவில்
தரையிரங்கிய போது ஒரு மனித இனத்தைக் கண்டதாகவும் அவர்களை இந்தியர்கள் என்று
எண்ணி கொலம்பஸ் அவர்களை இந்தியர்கள் என்றழைத்து பின் நாளில் அவர்கள்
சிவப்பு இந்தியர்கள் என்றும் அமெரிக்க இந்தியர்கள் என்றும் அழைக்கப்படுவதாக
கூறப்படுகிறது.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்றால் அங்கிருந்த
மனிதர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? கொலம்பஸ்க்கு முன் அழகும்
ஆபத்தும் நிறைந்த அட்லாண்டிக் கடல் பகுதியை கப்பல்கள் கடந்தனவா? வட மற்றும்
தென் அமெரிக்க பகுதிகளின் முந்தய கால வரலாற்றை தொடர்ச்சியாக பல
ஆராய்ச்சிகள் மூலம் ஆய்வு செய்ததில், வல்லுனர்கள் தெரிவிக்கும் உன்மைகள்
அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. இதன் மூலம் உலகம் தமிழர்களுக்கும்
இந்தியர்களுக்கும் இழைத்த அநீதி வெளிப்படுகிறது. முனைவர் பேரன் ரோபர்ட்
ஃப்ரெய்ஹெர் வான் ஹைன் கெல்டெர்ன் (Dr Baron Robert Freiherr von Heine
Geldern) மற்றும் கோர்டொன் எக்ஹோம் (Gordon F. Ekholm) என்ற உலகப் புகழ்
பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால்: “இந்தியாவில் இருந்து
சீனாவிற்கு ஃபா – ஹைனை (கி.பி. 399 – 414) ஏற்றிச் சென்ற மிகப் பெரிய
அளவுடைய கப்பல்களுக்கு மெக்ஸிகோவையும், பெருவையும் அடைந்திருப்பது
சாத்தியமில்லாமல் இருந்திருக்காது.
ஐரோப்ப நாடுகளில் 18ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல்களை விட நினைத்துப் பார்ப்பதற்கு கூட முடியாத
பன் மடங்கு பெரிய வலுவான கப்பல்களை கொலம்பஸ் பிறப்பதற்க்கு ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் உபயோகித்தனர்.” ஸ்பெய்ன் வரலாற்று
ஆய்வாளர் திரு. ஃப்ரே ஷாஹௌன் (1515 கி.மு) அவர்களது காலத்தில் இருந்து
இன்று வரை அமெரிக்காவின் வரலாற்றையும், சிகப்பு இந்தியர்கள்
என்றழைக்கப்படும் அமெரிக்க பழங்குடி மக்களின் வரலாற்றையும் தெரிந்து
கொள்வதில் ஆய்வாளர்கள் பெரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அதில் பலர்
இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்த மக்கள் தான் கடல் மார்கமாக அமெரிக்கவை
வந்தடைந்து அங்கு ஒரு பெரும் நாகரீகத்தை உருவாக்கினர் என்னும் முடிவுக்கு
வந்துள்ளனர். “மெக்ஸிகோவின் வரலாறு” (“A Compact History of Mexico”) என்ற
புத்தகத்தை எழுதிய திரு. இக்னகியோ பெர்னல் என்னும் எழுத்தாளர் ஆசியாவில்
இருந்து சுமார் முப்பத்தைந்தாயிரம் (35,000) ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள்
அமெரிக்கவிற்குள் நுழைந்தனர் என்கிறார். ஆனால்
திரு ஆர்கியோ நுன்ஸ் என்னும்
பிரிட்டனிய அனு விஞ்ஞானி ஆசியாவில் இருந்து 11000 ஆண்டுகளுக்கு முன்னர்
திராவிடர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தனர் என்று குறிப்பிடுகிறார்.
சில்வைன் லெவி (Sylvain Levi) எனும் பிரெஞ்சு கீழ்த்திசைவாணர்
(Orientalist) கிழக்கு நாகரீகம், மதம், இலக்கியங்கள் மற்றும் வரலாற்றைப்
பற்றி ஆய்வுகளை எழுதிய்ருக்கிறார். “இந்தியாவும் உலகமும்” என்ற பிரஞ்சு
மொழி புத்தகத்தில் அவர் ” பெர்ஸியா முதல் சீனக் கடல்பகுதி வரையில்,
பனிபடர்ந்த சைபீரியா முதல் ஜாவா மற்றும் போர்னியோ தீவுகள் வரை, ஒசீயானியா
முதல் சாகாற்றா வரை, இந்தியா அவளுடைய நம்பிக்கை, வரலாறு, கொள்கை மற்றும்
நாகரீகத்தைப் பரவச்செய்திருக்கிறாள்.
பல்லாயிறமாண்டு வரலாற்றில் அவள் உலக
மனித இனத்தின் நான்கில் ஒரு பகுதியில் அவளுடைய சுவடுகளைப்
பதித்திருக்கிறாள். அவளுடைய பழம்பெருமைகளைத் தெரியாமல் இத்தனைக் காலம்
வாழ்ந்திருந்தாலும் அவளுக்கு உலக வரலாற்றை சொந்தம் கொண்டாட முழு உரிமையும்
உண்டு.” என்று குறிப்பிடுகிறார். பல கடினமான முயற்சிகளின் பின்னனியில்
இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய கலாச்சாரம் இந்தியாவையும் தாண்டி பல
நாடுகளில் பரவியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
தெங்கிழக்கு ஆசிய நாடுகள் தவிர
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் அமெரிக்காவும் இதில் அடங்கும்.
இதற்கான பல ஆதாரமும் இப்போது கிடைத்திருக்கிறது. பண்டைய கால பஸிபிக் கடல்
பயணத்தை உறுதிப் படுத்தும் ஒரு முக்கிய ஆதாரமாய் விளங்குவது பண்டைய கால
காகித தயாரிப்பு தொழில்நுட்பம். சீனா, தெங்கிழக்கு ஆசியா, இந்தோனேசியா
மற்றும் மீசோ அமெரிக்கா பகுதிகளில் இத்தொழில்நுட்பம் ஒரே மாதிரியாக
அமைந்திருந்தது. மைக்கேல் கோ (Michael Coe) அவருடைய புத்தகத்தில் காகித
தயாரிப்பு தொழில் நுட்பம் கிழக்கு இந்தோனேசியாவில் இருந்து மீசோ
அமெரிக்காவிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்றிருக்கிறது என்று
தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுவது இந்த தொழில் நுட்பம் சென்றிருக்கும்
பட்சத்தில் இவ்விரு தேசங்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றமும் நடந்திருக்க
வாய்ப்புள்ளது என்கிறார்.
அன்புடன் சின்னவன்
No comments:
Post a Comment