டிசம்பர் 9
ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள்
1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1868 - வில்லியம் கிளாட்ஸ்டோன் (William Gladstone) பிரிட்டனின் பிரதமராக முதன்
முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நான்கு முறை பிரிட்டிஷ் பிரதமராக இருந்தார்.
1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922 - போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.
1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1953 - ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1963 - CCC எனப்படும் குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள் முதன் முதலில் சிங்கப்பூரில் அறிமுகம் கண்டன
1979
- பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு
அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே
முதலாவதாகும்.
1984 - தமிழக மக்கள் விடுதலை இயக்கம் துவக்கம்
1986
- இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர்
மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி
நீக்கம் செய்யப்பட்டனர்.
1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
1992 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment