Digital Time and Date

Welcome Note

Sunday, December 2, 2012

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கொசுக்கள
ால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இந்திய முழுவதும் வேகமாக பரவி வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் டெங்கு பரவி வருகிறது.
இந்த அளவுக்கு டெங்கு பரவியதற்கு கரணம், ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் கட்டுகடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில் ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக கொசுக்கள் டெங்குவை பரப்புவது கண்டுபிடிகபட்டுள்ளது. ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால் ஆசிய டைகர் ரக கொசுக்கள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.

இதுபோல கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு காரணம் தவளைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுதான் என்று சுற்றுசுழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால் தண்ணீரில் மிதக்கும் கொசுக்களின் லார்வாக்களை அவை சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் தவளையை கொள்வதை தடை செய்தார்கள்
நூல்:தாரமீ(1914)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவளைகளை கொள்வதை தடை செய்துள்ளார்கள் என்று மேற்கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அப்படியானால் தவளைகளின் காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹுடைய தூதர் அவர்கள் தவளையைக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.
தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் உண்மைபடுத்துகின்றன...

நன்றி:உணர்வு பத்திரிக்கை..

No comments:

Post a Comment