Digital Time and Date

Welcome Note

Tuesday, December 25, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 23



தேசிய உழவர்கள் நாள்.
1783 - ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.

1914 - முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.

1916 - முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.

1922 - தினசரி செய்திகளை வழங்கத் தொடங்கியது பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம்.

1947 - முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

1948 - முன்னாள் ஜப்பானியப் பிரதமர் Hideki Tojo -வும் ஆறு ஜப்பானிய ராணுவத் தலைவர்களும் தோக்கியோவில் தூக்கிலிடப்பட்டனர். மனுக்குலத்துக்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அந்தத் தண்டனை.

1954 - முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.

1957: அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயன் கிறேக் வரலாற்றின் மிக இளமையான ( 22 வருடங்கள், 194 நாட்கள்) டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவரானார்.


1958 - டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.

1970: நியூயோர்க் நகரில் உலக வர்த்தக நிலையத்தின் வடக்குக் கோபுரம் 1368 அடி (417) மீற்றர் உயரத்தை அடைந்தது. அக்காலத்தில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக அது விளங்கியது.

1972: மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலியாகினர்.

1972 - தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.

1979 - சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.

1986 - எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.

1990 - 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2002: ஈராக்கின் மிக் 25 விமானத்தின் மூலம் ஆளில்லா விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. உலகில் ஆளில்லா விமானமொன்று தாக்குதலொன்றில் சம்பந்தப்பட்டது அதுவே முதல் தடவை.

2003: சீனாவில் இயற்கை வாயு அகழ்வுக் களமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 234 பேர் பலி.

2005: அஸர்பைஜானில் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பலி.

2005: சூடானுக்கு எதிராக ஆபிரிக்காவின் சாட் நாடு யுத்தப் பிரகடனம் செய்தது.

No comments:

Post a Comment