Digital Time and Date

Welcome Note

Monday, December 31, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 31


1492 - சிசிலியில் இருந்து 100,000 யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1599 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது.

1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பல அங்காடி உரிமையாளர்கள் தமது அங்காடிகளின் பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.

1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.

1862 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.

1879 - வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது
1909 - மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.

1909 - வானொலியின் தந்தை என்று போற்றப்படும் மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1923 - லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1946 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1963 - மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகளாகப் பிளவுற்றது.

1981 - கானாவில் இடம்பெற்ற இராணிவப் புரட்சியில் அதிபர் ஹில்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

1984 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.

1986: பியூர்ட்டோ ரிக்கோவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 97 பேர் பலி.


1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அதிபராகத் தெர்ர்ந்தெடுக்கப்பட்டார்.

1991 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் அனைத்து நிறுவனங்கள், மற்றும் சோவியத் ஒன்றியம் இந்நாளில் இருந்து அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டன

1992: செக்கஸ்லோவாக்கியா நாடானது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரு நாடுகளாக பிரிந்தது.

1994 - பீனிக்ஸ் தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.

1999 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.

1999 - 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.

1999 – 155 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்றைக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இஸ்லாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.

2004 - உலகின் மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

2006 - ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது

No comments:

Post a Comment