டிசம்பர் 25
கிறிஸ்துமஸ்
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் முக்கிய பண்டிகை கி.பி.440 ஆம்
ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதியையே கிறிஸ்துமஸ்
தினமாகக் கொண்டாடி வருகிறது.
800 - சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.
1000 - ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது.
1066 - முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1643 - கிறிஸ்மஸ் தீவு உருவாக்கப்பட்டது.
1741 - ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
1758 - ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது.
1868
- அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப்
படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன்
அறிவித்தார்.
1892 - சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் கடலின் நடுவிலுள்ள ஒரு பாறையில் அமர்ந்து தனது மூன்று நாள் தியானத்தைத் தொடங்கினார்
1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிஸ்துமஸ் தின போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1926 - ஜப்பானின் டாயீஷோ மன்னன் இறந்தான். அவனின் மகன் ஹிரோஹிட்டோ அரசனானான்.
1932: சீனாவில் கான்ஸு நகரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 275 பேர் பலி.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
1947 - சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
1968
- சம்பளம் அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள்
தமிழ்நாட்டில் உயிருடன் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுப் படுகொலை
செய்யப்பட்டனர்.
1977 - இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்
1977: நகைச்சுவை நடிகர் சார்லி சப்ளின் தனது 88 ஆவது வயதில் காலமானார்.
1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
1989:
ருமேனிய ஜனாதிபதி நிகோலோ சௌசெஸ்குவும் அவரின் மனைவி எலினாவும் தேசத்துரோக
குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு, இரகசிய இராணுவ விசாரணைக் குழுவினால்
நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகளாக காணப்பட்டதால் துப்பாக்கியால்
சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1990 - உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1991 - சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1991 - உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
2003
- மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட
பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
2004
- காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில்
இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி
14, 2005 இல் டைட்டானில் இறங்கியது.
No comments:
Post a Comment