கணினியில் God mode என்றால் என்ன? அதை செயல்படுத்துவது எப்படி? இதன்
பயன்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கவிருக்கிறோம். கணினியில் GodMode
என்பது நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான ஒரு வசதியாகும். இதைப்பற்றிய
விபரங்களை இப்பதிவில் பார்ப்போம்.
காட்மோட் என்றால்?
(What is Godmode?)
Windows
இயங்குதளத்தில் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு அமைப்பு (settings)
இருக்கும். உதாரணமாக Action Center, Administrative Tools, Auto Play,
Backup and Restore, Bitlocker drive encryption, color management,
credential management, Date and time,
Default Programs, Desktop
gadgets, Device manager, Device Printers, Display, Ease of Access
center, Folder Options, Fonts, Getting Started, Home Group, Indexing
Options, Internet Options, keyboard, Locations and other Sensors, Mouse,
Network and sharing center, Notifications Area Icons, Parental
controls, Performance information and Tools, Personalization, Phone and
Modem, Power Options, Programs and Features, Region and Language,
RemoteApp and Desktop connections, Sound, Speech Recognition, Sync
Center, System, Taskbar and Start menu, Trouble Shootings, User account,
Windows CardSpace, Windows Defender, Windows Firewall, Windows Update
என நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கின்றன.
இவ்வாறு விண்டோசில் நிறைய செட்டிங்ஸ்கள் இருக்கிறது.. இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியேதான் அணுக முடியும்.
அவ்வாறில்லாமல்
அனைத்து செட்டிங்ஸ்களையும் ஒரே இடத்தில் அணுக வேண்டி உருவாக்கிய ஒரு சிறிய
உபயோகமே(utility) இந்த காட்மோட்(God Mode) ஆகும். இந்த God Mode ற்கு
Windows Master Control Panel Shortcut என்ற மற்றுமொரு பெயரும் உண்டு.
God Mode -ஐ நம் கணினியில் கொண்டுவருவது எப்படி?
இது மிகவும் சுலபம்தான். இதற்கு உங்கள் கணினியில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு புதிய போல்டரை (New Folder) உருவாக்குங்கள்.
கோப்புறை உருவாக்குவது எப்படி?
(how to create new folder?)
desktop ==>right click==>new==folder இந்த முறையிலும் புதிய கோப்புறையை உருவாக்கலாம்.
அந்த புதிய கோப்புறைக்கு பெயராக கீழிருப்பதை அப்படியே தட்டச்சிட்டோ, அல்லது காப்பி செய்து இட்டுவிடுங்கள்.
GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
அவ்வளவுதான். உங்கள் கணினியில் இப்போது Godmode உருவாகியிருக்கும்.
இப்போது உங்கள் போல்டரானது இப்படி மாறியிருக்கும். அதை கிளிக் செய்யும்போது விண்டோஸில் உள்ளதை செட்டிங்களையும் தொகுத்துக் காட்டும்.
இப்போது
விண்டோசில் உள்ள அனைத்து செட்டிங்ஸ்களும் இந்த காட்மோடில்
காண்பிக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் ஒரு செட்டிங்சில் மாற்றம் ஏற்படுத்த
வேண்டியிருப்பின் இந்த காட்மோட் டை கிளிக் செய்து, வேண்டிய செட்டிங்சை
கிளிக் செய்து அதில் மாற்றம் செய்துகொள்ளலாம்.
Windows-ன் அனைத்து Settingsகளும் இந்த Godmode-ல் தொகுப்பட்டு கிடைப்பதால் ஒவ்வொரு செட்டிங்ஸ்ஆக நாம் தேடி அலையவேண்டியதில்லை...
குறிப்பு:
இந்த பயன்மிக்க utility உருவாக்கியவர் மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும்
ஒருவர்தான். இந்த வசதியானது விண்டோஸ் 7 (Windows 7 32 bit,64bit),
விண்டோஸ் விஸ்டா(Windows Vista 32 bit), ஆகிய இயங்குதளங்களில்
செயல்படுகிறது.
நன்றி : muthu raj
No comments:
Post a Comment