Digital Time and Date

Welcome Note

Saturday, January 5, 2013

வரலாற்றில் இன்று

ஜனவரி 05





1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.

1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.


1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.

1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.

1925 - திருமதி. நெலி டெய்லர் ராஸ் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஆளுநர்.

1933 - அமெரிக்காவின் புகழ் பெற்ற கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது.

1940 - கத்தோலிக்கக் காலண்டர்படி செயிண்ட் சைமன் ஸ்டைலெட்ஸ் தினம். தனக்குக் கடவுளிடத்திலுள்ள தீவிர பக்தியைக் காட்டுவதற்காக ஒரு தூணின் உச்சியிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.

1993: ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.

1999 - ஹரியானாவில் கிறித்தவர் வெளியேறக் காலக்கெடு விதித்தல்.

2000: அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித்தலைவர் குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment