Digital Time and Date

Welcome Note

Sunday, January 13, 2013

சுத்தமும்.....அசுத்தமும்....

சுத்தமும்.....அசுத்தமும்....

இஸ்லாத்தை விமர்சிக்கக்கூடியவர்கள் அதை விட சிறப்பான சட்டங்களையோ அல்லது வழிகாட்டுதல்களையோ வைத்துக்கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்தால் சிறப்பாக இருக்கும்.

உதாரணமாக சிறு நீர் கழிக்கும் போது கூட ஒழுக்கத்தையும் சுத்தத்தையும் சொல்லித்தரும் ஒரு அருமையான வழிகாட்டல் கொண்டது இஸ்லாம்..

தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்று சொல்லித்தரும் இஸ்லாத்தின் வழிகாட்டலைபாருங்கள்...

தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூமாலிக் அல் அஷ்அரி (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-381)

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை சிறுநீர் கழிக்கப் போகின்றவருக்கு கூட ஆரம்பம் முதல் சிறுநீர் கழித்து திரும்புகின்ற வரை மிகத் தெளிவான வழிகாட்டலினை வழங்கியுள்ளது.

மக்களுக்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையில் மலசலம் கழிப்பது, மக்கள் கூடுகின்ற பொது இடங்கள், மனிதர்கள் இளைப்பாறுகின்ற இடங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் மலசலம் கழிப்பது மனிதர்களின் சாபத்தை ஈட்டித்தரும் செயல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘சாபத்திற்குரிய இரு செயல்களை தவிர்த்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-448)

‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்;. கழிப்பிடம் சென்றால் பிறவி உறுப்பை வலக் கரத்தால் தொடவோ, தூய்மைப்படுத்தவோ வேண்டாம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூகதாதா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-153)

பத்து (விஷயங்கள்) நபிவழியாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

1. மீசையை குறைத்தல். 2. தாடியை நிறைவாக வைத்தல். 3. பல் துலக்குதல். 4. மூக்கிற்கு தண்ணீர் செலுத்துதல். 5. நகங்களை வெட்டுதல். 6. விரல்களின் முடுச்சுகளையும் அதன் விரிவுகளையும் கழுவுதல். 7. அக்குளின் முடிகளை களைதல். 8. ஆண், பெண் இரு சாராரும் மர்மஸ்தானத்தின் மேல் முடியை சிறைத்தல். 9. துப்புரவு செய்தல். பத்தாவதை நான் மறந்து விட்டேன். ஆயினும் அது வாய் கொப்பளித்தலாக இருக்கலாம் என முஸ்அபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் என ஜகரிய்யா கூறுகிறார். தண்ணீரால் சுத்தம் செய்தல் என்பது மலஜலம் கழித்தபின் சுத்தம் செய்தலாகும் என்று ‘வகீஉ‘ (என்பவர்) கூறுவதாக குபைதா ரளியல்லாஹு அன்ஹு (இந்த வார்த்தையை) அதிகப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அருமையானதொரு வழிகாட்டலை வேறு எந்த சித்தாந்தமாவது சொல்லியிருக்கிறதா....?

மற்ற சித்தாந்தங்களை பாருங்கள்...... மனிதன் சிறு நீரை விட மிருகத்திம் சிறு நீர் மிகவும் அசுத்தமானது என சொல்லித்தெரிய வேண்டியதில்லை....மாட்டின் சிறு நீரை தொட்டால் புண்ணியம் என நினைத்து அதை பிடிக்கும் அறுவறுப்பான செயலை பாருங்கள்....

கடையிலோ, விருந்திலோ வாழை இலை போட்டு பந்தி பரிமாறும் போது...அதில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யும் மக்கள்...பக்தி என வந்த வுடன் ...மண்ணில் சோறு போட்டு மண்சோறு என்ற பெயரில் சாப்பிடும் அருவருப்பான செயல்... அந்த மண்ணில் அல்லது அந்த கல்லில் என்ன ? என்ன? அசுத்தம் இருக்கும் என யாருக்கு தெரியும்....?

இஸ்லாம் ரத்தத்தை விலக்கப்பட்டதாக ஹராமாக ஆக்கியுள்ளது காரணம் அந்த ரத்தத்தில் தான் நோய்க்கிருமிகள் உள்ளது அதை சமைத்து சாப்பிட்டாலும் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் என அறிவியல் சான்று பகரும் போது....அதை பக்தியின் பெயரால் நான் அப்படியே சாப்பிடுவேனே மம்மி... என்ற ஸ்டைலில் ஆட்டைக்கடித்து பச்சைரத்தத்தை குடிக்கும் செயல் அறிவு சார்ந்த செயலா..?

எனவே வித்தியானந்தா போன்ற அறிவு(?) ஜீவிகள் இஸ்லாத்தை விமர்சிக்குமுன் தங்களின் அறிவைப்பயன் படுத்தி...எது உண்மையிலேயே சிறந்த வழிகாட்டுதல் என சிந்தித்து பதிவிட்டால் நேர் வழி கிடைக்கும்....