Digital Time and Date

Welcome Note

Monday, January 21, 2013

இலங்கை மற்றொரு அழிவை நோக்கியா?

இலங்கை மற்றொரு அழிவை நோக்கியா?

இதை முழுமையாக வாசிக்கவும்

சுத்த பைத்தி யக்காரத் தனம்.

இப்படித் தான் சில இன வாதிகளால் ஆரம் பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் விரோ தப் பிரசாரங்களை வர்ணிக்க வேண்டும்.

சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு, களம் இறங்கியுள்ள இச்சிறிய சக்தியின் செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்திற்கு அபாயகரமானவை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இச் சக்திகளின் செயற்பாடுகள் நாடு தழுவிய ரீதியில் சூடு பிடித்துள்ளன.

அண்மையில் இரு முஸ்லிம் நடை பாதை வியாபாரிகள் சில பெளத்த பிக்குகளால் எம்பிலிப்பிட்டியவில் தாக்கப்பட்டனர். இது குறித்த முறை யீட்டை ஏற்க மறுத்த பொலிஸார், பிறகு ஜே.வீ.பியின் தலையீட்டை அடுத்தே முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். வாளோடு காட்சி தரும் ஒரு மனிதன் ‘பள்ளிவாயலை அகற்று, அல்லது நாம் அகற்றுவோம்’ என்று கூறுவது போல் சித்தரிக்கும் சில சுவரொட்டிகள் மஹியங்கனையில் ஒட்டப்பட்டிருந்தன.

தனது மூன்றாவது பிரசவத்திற்காக வந்திருந்த முஸ்லிம் பெண்ணிற்கு பலவந்தமாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய முயன்ற, அரசாங்க வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பற்றிய தகவல்கள் அண்மையில் வெளியானது.

மூன்று வாரங்களுக்கு முன் மக்கொ னைப் பகுதியில், அப்பகுதியில் வாழும் சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களால், பெளத்த பிக்கு ஒருவரின் ஓராண்டு மறைவை நினைவு கூறும் வகையில், வைத்திய முகாமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது. மறைந்த பிக்கு எல்லா சமூகங்களைச் சேர்ந்தவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவராவார். அப் பகுதி பள்ளி நிர்வாகிகள் அவரது இறுதி யாத்திரையின் போது, அவரது சடலத்தை சுமந்து சென்றிருந்தனர்.

குறித்த வைத்திய முகாம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, இரண்டு இனம் தெரியாத பிக்குகள், மேலும் சிலருடன் ஆடம்பர வாகன மொன்றில் அவ்விடத்திற்கு வருகை தந்து, வைத்திய முகாமை மூடி விடுமாறு கேட்டுக் கொண்டனர். முகாமை ஒழுங்கு செய்யும் பணியில் கலந்து கொண்டிருந்த பிக்கு ஒருவர் நிலமையை விளக்க முயன்றபோது, அவர் எச்சரிக்கப்பட்டதோடு, வைத் திய முகாமை பலவந்தமாக மூடவும் செய்தனர்.

சமூகங்களுக்கிடையிலான நல்லுற வைக் குலைக்கும் இந்த வெளி நபர்கள் யார்? இச்சக்திக்கு நிதியுதவி செய்பவர்கள் யார்? நிதியுதவி மேற் கொள்ளப்படுவதன் நோக்கம் என்ன? எவ்வாறு அவர்கள் சுதந்திரமாக செயற் படுகிறார்கள்? இவையே இன்றுள்ள விடை காணப்பட வேண்டிய வினாக் களாகும். இக்குழுவினரின் செயற் பாடுகள் சமாதானத்தை விரும்பும் மைய நீரோட்ட சிங்கள சமூகத் தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத் துவதில் சந்தேகமில்லை.

எவ்வாறாயினும், சட்டத்திற்கு முரணாக செயற்படும் இக்குழுவின ரை சட்டத்திற்கு முன்கொண்டு வருவதற்கான எவ்வித நடவடிக் கைகளும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. இது தொடர்பில் இன்று வரை முஸ்லிம் சமூகம் குறிப்பிடத் தக்க சகிப்புத் தன்மையை வெளிப் படுத்தியுள்ளது. ஆனால், இச்சகிப்புத் தன்மை எது வரை தொடரும் என்பதே கேள்வி. ஒரு கட்டத்தில், சில முஸ்லிம்கள் தமக்கெதிரான பிரச் சாரங்களுக்கு எதிராக, எதிர்மறையான துலங்களைக் காட்டலாம். அத்தகைய துலங்கல் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலை மேலும் பலப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தப்படலாம்.

யுத்தம் ஏற்படுத்திய காயங்கள் எவ்வளவு ஆழமாக இருப்பினும், விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியைத் தொடர்ந்து, எல்லா சமூகங்களும் ஒரு சிறப்பான எதிர் காலத்தை நோக்கி நடை போடலாம் என்ற நம்பிக்கை நாடு முழுதும் பரவியது. அந்நம்பிக்கையில் இவ்வின வாத சக்திகள் மண்ணை வாரி இறைக் கும் கைங்கரியத்தை தற்போது மேற் கொண்டு வருகின்றன.

மைய நீரோட்ட சிங்களவர்களின் மனங்களை முஸ்லிம்களுக்கு எதிரா கத் திசை திருப்பும் இவ்விஷப் பிரச்சா ரம் சிறிய, ஆனால், நன்கு ஒழுங் கமைப்பட்ட சிறிய குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது. 19 சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமான இணைய தளங்கள் இவர்களது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

முதலில் அநுராதபுரத்தில் நானூறு ஆண்டுகள் பழைமையான தர்ஹா ஒன்றை தகர்த்தார்கள். பிறகு பிரதம பெளத்த பிக்குவின் தலைமையில் தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்றது. ஒரு பள்ளிவாசலைத் தாக்கி, ஜும்ஆ தொழுகையை ஒரு ரவுடிக் கும்பல் தடை செய்வது இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முறையாகும்.

அதிலிருந்து ஆரம்பித்து சிறியதும், பெரியதுமாக பள்ளி வாயல்களை இலக்கு வைத்து பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்ட ’வெளி நபர்கள்‘ இதுவரை சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை.

முஸ்லிம் வியாபார நிலையங்களைப் பகிஷ்கரிக்குமாறும், முஸ்லிம்களுக்கு காணி, கட்டிடங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் கோரும் துண்டுப் பிரசுரங்கள் நாடு பூராகவும் இன்று விநியோகிக்கப்படுகின்றன.

இப்பிரசாரத்தை முன்னெடுப்பவர்கள் ஒரு மில்லியன் இலங்கையர்கள் முஸ்லிம் நாடுகளிலேயே பணி புரி வதையும், இதனால் ஆறு பில்லி யன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைப் பதையும் மறந்து விட்டார்களா?

நாட்டின் மசகு எண்ணெய்த் தேவை யில் பெரும்பகுதியை இந்நாடுகளே பூர்த்தி செய்கின்றன. எமது தேயிலை, பாரம்பரியமற்ற ஏற்றுமதிப் பொரு ட்கள் என எமது ஏற்றுமதிகளின் குறிப்பிடத்தக்க ஒரு வீதம் முஸ்லிம் நாடுகளை நோக்கியதாகவே அமை ந்துள்ளது. இந்நாடுகளில் இரு ந்து பெருமளவிலான உல்லாசப் பிர யாணிகள் இங்கு வருகை தருகின் றனர். பல முஸ்லிம் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்கின்றனர்.

இறுதி யுத்தத்தில் மேற்குலகும், கீழைத்தேய பெளத்த நாடுகளும் கைவிரித்த போது, பாகிஸ்தான், லிபியா, ஈரான் போன்ற நாடுகளே இலங்கைக்கு இராணுவ உதவிகளை மேற்கொண்டன. கடந்த மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்குச் சாதகமாகவே வாக்களித்தன. முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் முஸ்லிம் உலகில் இலங்கைக்கு இருக்கும் இத்தகைய சாதகமான நிலைக்கு அச்சுறுத்தலாக அமையாதா?

அனைத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம்கள் தமது ஆத ரவை வழங்க முன்வராமையே நாடு பிரிவினைக்கு உள்ளாகாமல் இருப் பதை உறுதி செய்தது. குறிப்பாக யுத்தத்தின் ஆரம்ப கட்டங்களில், இலங்கை இராணுவம், போதிய வளங்களைக் கொண்டிராத காலப் பகுதியில், முஸ்லிம்கள் தம் ஆதரவுக் கரத்தை விடுதலைப் புலிக ளுக்கு நீட்டியிருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கலாம். எனினும், பல்வேறு இழப்புகள், தியாகங்களை மேற்கொள்ள முன்வந்தார்களேயன்றி, முஸ்லிம் சமூகம் அத்தகையதொரு முடிவை எடுக்கவில்லை.

எனவே, யாருடைய நலவுக்காக இவ்வினவாதக் கும்பல் செயற் படுகிறது? மேற்குலக கிறிஸ்தவர் களையும், கிழக்குலக ஹிந்துக்களை யும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிய பிறகு, தற்போது உலகளவில் பெளத்தர்களையும் முஸ்லிம்களுக்கு எதிரான பகடைக் காய்களாக மாற்ற யூத சக்திகள் முயல்கிறார்கள் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா?

தம்புள்ளை தாக்குதலைப் போலவே, பங்களாதேஷ் பெளத்தர்க ளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டவர் களும் வெளியிடங்களில் இருந்து வர வழைக்கப்பட்டவர்கள் என அறிக்கை கள் கூறுகின்றன.

வொஷிங்டன்- டெல்அவிவ்- புதுடில்லி என்ற முஸ்லிம் விரோத அச்சின் இன்னொரு அங்கமே இலங்கையில் நடந்தேறிக் கொண்டிருப்பதாக பலர் சந்தேகிக்கின்றனர். எனவே, சிங்கள சமூகத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த சக்திகள் இது தொடர்பில் தலையிட்டு, நாட்டை மற்றொரு அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு முன்வர வேண்டிய மற்றொரு முக்கிய வரலாற்றுக் கட்டத்தை நாடு தற்போது கடந்து கொண்டிருக்கிறது.

இந்திய இனவாத அமைப்புக்கள் 7877 கோடி இந்திய ரூபாய்களை முஸ்லிம்களுக்கு எதிரான கலகங் களைத் தூண்டுவதற்கான ’நன்கொ டையாகப்‘ பெற்றுள்ளன என்ற இந்திய தகவல் அமைச்சின் அறிக்கையை த மில்லிகஸட் என்ற புது டில்லியைத் தளமாகக் கொண்ட தினசரி (டிசம்பர் 2009) செய்தியாக வெளியிட்டிருந்தது. இந்நன்கொடை இஸ்ரேலினால், ஐரோப்பாவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அவ் வாறே, இந்திய இனவாத அமைப் புத் தலைவர்களின் இஸ்ரேல் விஜ யங்களும் அண்மைக்காலத்தில் அதி கரித்துள்ளன. இஸ்ரேலில் வைத்து மூளைச் சலவை செய்யப்படும் இவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின் றனர்.

இலங்கையிலும் இது தானே நடக்கிறது? அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும், ஏனைய வர்களும் இஸ்ரேலுக்கு விஜயம் செய்கின்றனர். இஸ்ரேலைக் கட்டித் தழுவும் இவர்களுக்கு இஸ்ரேலின் பின்னணி பற்றிய அ,ஆ பாடம் கூட தெரிந்திருப்பதில்லை. எமது அச்சு ஊடகங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ள இஸ்ரேலுக்கு சாதகமான, முஸ்லிம்களுக்கு எதிரான ஆக்கங்களை நோக்கும் போது, நாட்டில் இஸ்ரேலின் ஆதிக்கம் வெளிப்படையாக வளர்ந்து வருவதைப் புரிந்து கொள்வது சிரமமானதல்ல.

யூதர்கள் மூலம் நாட்டுக்கு ஏற்படக் கூடிய அபாயத்தை அமெரிக்காவின் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் பல நூற்றாண்டுகளுக்கு முன் எச்சரித்தார். அவர் எச்சரித்தது போலவே, இன்று யூதர்கள் அமெரிக்காவை ஆட்டிப் படைப்பவர்களாக மாறியுள்ளனர். இந்த வரலாற்றில் இருந்து இலங்கை முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

ஹலால் சான்றிதழ், பெண்களின் உடை, மாடறுத்தல், சனத்தொகைப் பெருக்கம் என பல்வேறு அமசங்களை முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சா ரத்திற்கான துப்புக்களாக இவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இவை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், அவை சமாதானமான வழிகளில் தீர்வு காணப்பட முடியு மானவையே!

எனினும், அதற்குப் பதிலாக இந்துத் துவப் பாசிச அமைப்பான சிவசேனாவை ஒத்த தீவிர முஸ்லிம் விரோத அமைப்பொன்று, அண்மையில் பெளத்த விகாரையொன்றில் கூட் டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அக்கூட்டத்தில் முஸ்லிம்கள் சிங் கள வர்களினதும், பெளத்தர்களினதும் இருப்புக்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தலாக இருக்கின்றார்கள் என்ற தவறான குற்றச்சாட்டொன்றை முன் வைத்துள்ளது.

இப்பிரசாரங்களின் மிக முக்கிய நோக்கம் முஸ்லிம்களை அடக்கி யொ டுக்கி, அவர்களை ஓரங்கட்டுவது தான். ஆனால், முஸ்லிம்கள் இலங்கையில் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டுத்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பொலிஸ் திணைக்களம், இராணுவம் என்ப வற்றில் முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்படுவது மிக மிகக் குறைவு. மிக அரிதான முஸ்லிம்களையே அரச திணைக்களங்கள், ஏனைய அரச சார்பு நிறுவனங்களில் காண முடியும். தனியார் துறை கூட முஸ்லிம்களுக்கு கதவடைப்பு செய்தது போன்ற நிலையே தொடர்கின்றது.

முஸ்லிம் விவகாரங்களில் மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் இப்போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 130000 முஸ்லிம்கள், யுத்தம் நிறைவடைந்து மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், இன்னும் அகதி முகாம் களில் மிக மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது ஆசனங்கள், பதவிகள், சுக போகங்கள் என்பவற்றுக்காக தமது ஆன்மாக்களை அடகு வைத்து விட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ் விவகாரம் தொடர்பில் வாய் திறக்கவே தயங்குகிறார்கள். வெட்கக் கேடான விடயம் என்னவென்றால், ஐ.தே.கட்சி துணைத் தலைவர் சஜித் பிரேமதாச அதிகரித்து வரும் முஸ்லிம் விரோத உணர்வுகள் குறித்து குரல் எழுப்ப முற்பட்ட போது, சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை அனுமதிக்காமைதான்.

இது தொடர்பில் ஜே.வீ.பி நடந்து கொண்ட முறையைப் பாராட்டத் தான் வேண்டும். இத்தோடு தொடர்பான மற்றொடு அம்சத்தையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத் தமானதா கும். 44 வயதான முஹம்மத் ரபீக் என்ற மடவளை பஸாரைச் சேர்ந்த சிறிய கடை உரிமையாளர் கடந்த மாதம் வாகன விபத்தொன்றில் கொல்லப் பட்டார். அவரது மரணச் சடங்கில் மஹியங்கனையில் இருந்து 20 பஸ் வண்டிகள் நிறைய சிங்களவர்கள் வந்து கலந்து கொண்டார்கள். தமது சொந்த குடும்பத்தவர் ஒருவரை இழந்தது போன்று, இரவு 10 மணி வரை அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். இவ்வாறுதான் இத்தனை காலமும் சிங்கள - முஸ்லிம் உறவு இருந்திருக் கிறது.

இலங்கை முஸ்லிம்களைப் பற்றி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பின்வருமாறு குறிப்பிட்டார். ‘இலங்கை முஸ்லிம் சமூகத்தினதும், அதன் நிறுவனங்களினதும் சிறப்பம்சம் என்னவென்றால், அது ஆயுதப் போராட்டமொன்றிற்கோ, அழிவிற்கோ தம்மை ஒரு போதும் ஒழுங்கு செய்து கொள்ளவில்லை. நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பரவியிருக்கும் இவர்கள் சமாதானப் பிரியர்கள். தமது கலாசாரத் தனித்து வத்தைக் காத்துக் கொள்ளும் அதே வேளை, ஏனைய இன, மதப் பிரிவின ரோடு பழகி, சிறப்பான தொடர் பைப் பேணி வருகிறார்கள். இது பாரா ட்டப்பட வேண்டியதொரு அம்சமா கும்‘.

தற்போதைய நிலையில் சிங்கள சமூகத்தின் பொறுப்பான சக்திகள் இப்பிரசாரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இல்லாத போது, மீண்டும் இந்நாடு மற்றொரு கொலைக் களமாக மாற்றமடையலாம்.

நன்றி விடிவெள்ளி

No comments:

Post a Comment