Digital Time and Date

Welcome Note

Friday, February 8, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 5


நிகழ்வுகள்

62 – இத்தாலியின் பொம்பெய் நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.

1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.

1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

1782 - ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.

1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1818: சுவீடன் - நோர்வே மன்னராக ஜீன் பப்டிஸ்ட் பேர்னாடோட் முடிசூட்டப்பட்டார்.

1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

1882: பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட், கொங்கோவை உருவாக்கினார்.

1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.

1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1909: பெல்ஜியத்தை சேர்ந்த லியோ பீக்லண்ட், பெகலைற் எனும் உலகின் முதலாவது செயற்கை பிளாஸ்ரிக்கை தயாரித்தார்.

1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.

1918: ஜேர்மன் விமானமொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது. அமெரிக்காவுக்கு கிடைத்த முதலாவது வான்வழி வெற்றி இது.

1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.

1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.

1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

1994: பொஸ்னியா,ஹேர்ஸகோவினா யுத்தத்தின்போது சரஜீவோ நகர சந்தையில் ஷெல் ஒன்று விழுந்ததால் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் காயமடைந்தனர்.

2000: ரஷ்ய படைகளினால் செச்னிய பிராந்தியத்தில் சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1914 - அலன் ஹொட்ஜ்கீன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1998)

1915 - ராபர்ட் ஹொஃப்ஸ்டாட்டர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1990)

1976 - அபிஷேக் பச்சன், இந்தி நடிகர்

இறப்புகள்

1898 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழ் அறிஞர் (பி. 1838)

1999 - வசீலி லியோன்டியெஃப், நோபல் பரிசு பெற்ற ரசியப் பொருளியலாளர் (பி. 1906)

2008 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917)

சிறப்பு நாள்

பாகிஸ்தான் - காஷ்மீர் நாள்