Digital Time and Date
Welcome Note
Thursday, February 21, 2013
உஷார் ஐயா உஷாரு!
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துகிறீர்களா?
அப்படியென்றால் இதைக் கொஞ்சம் படியுங்கள்.
நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் ஒவ்வொரு மெயிலையும் கூகிள் நைசாக முழுசாக
படித்து அந்த மெயிலில் உள்ள கன்டென்ட்களுக்கு ஏற்ப அதை பல்வேறு
விளம்பரங்களுக்கும் பயன்படுத்துகிறது.
அந்த விளம்பரங்கள் கூட
நீங்கள் படிக்கும் ஜிமெயிலுக்கு அருகிலேயே வருகிறது. எனவே உங்களுடைய
இரகசியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதுடன் உங்கள் தகவல்களை எடுத்து
உங்களிடமே காசு சம்பாதிக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகிறது மற்றொரு
மெயில் சர்வீசான மைக்ரோசாப்ட்!
வலைத்தளங்களில் புதுமை கொண்டு
வந்து தங்கள் யூசர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நடுவிலே விளம்பரமும்
செய்து அதன்மூலம் பெரும் செல்வாக்குடன் திகழ்வது யார் என்ற போட்டி கூகுள்
மற்றும் பிற கம்பெனிகளிடையே வெகுகாலமாக நடந்துவருகிறது.
மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு எதிராக கூகுள் தன் தேடு
பொறியான கூகுள் குரோம் வெளிவிட்டதும் பெருவாரியான யூசர்கள் க்ரோமுக்கு மாறி
இப்போது அதுதான் ஹிட் என்ற நிலையில் உள்ளது.
அதைப்போன்றே மொபைல்
சேவைகளில் கூகுள் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் வெளியிட்ட பிறகு மற்ற மொபைல்
கம்பெனிகளும் ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் பயன்படுத்தி தங்கள் மொபைல்களை
தயாரிக்கின்றன.
எனவே இப்போது ஆண்ட்ராய்ட் (சாப்ட்வேர்) போன் தான் முன்னிலையில் உள்ளது.
ஏன் என்றால் அதுதான் இப்போது லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களை அள்ளி வழங்குகிறது.
விலையும் மற்ற ஸ்மார்ட் போன்களை விட குறைவு.
மின்னஞ்சல்களில் கூகுளின் ஜிமெயில், யாஹூ, அவுட்லுக், ரெடிஃப் என பல இருந்தாலும் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம்.
இலவசமாக அளிக்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி மெயில் அனுப்பும் / பெறும்
ஜிமெயில் யூசர்களின் மெயில் ஒவ்வொன்றையும் படித்து பக்கத்திலேயே அது
தொடர்பான விளம்பரங்களையும் வெளியிட்டு ப்ரைவசியை காசாக்குகிறது என்ற பகீர்
தகவலை சொல்கிறது மைக்ரோசாப்ட்.
மேலும் மைக்ரோசாப்ட்டின் இலவச
மின்னஞ்சல் சேவையான அவுட்லுக் மெயிலில் இப்படி படிப்பதில்லை. எனவே அனைவரும்
தங்கள் ப்ரைவசியை பாதுகாக்க அவுட்லுக்கை பயன்படுத்துங்கள் என்றும்
கூறுகிறது. மேலும் கூகுள் தனி நபர் ரகசியம் காக்க வேண்டும் என்று ஜிமெயில்
யூசர்கள் கூகுளை நிர்பந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மைகரோசாப்ட் கூறும் இந்த குற்றசாட்டு பற்றி ஜிமெயில் பயன்படுத்தும் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீராம் என்பவரிடம் கேட்டபோது..
"பொதுவாகவே வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் எல்லாமே நூறு
சதவிகிதம் ரகசியமானதோ அல்லது பாதுகாப்பானதோ இல்லை. அதுவும் பெரிதும்
பயன்பாட்டில் உள்ள இந்த இலவச மின்னஞ்சல்கள் எல்லாம் தனிமை தகவல்
பரிமாற்றத்திற்கு உகந்ததல்ல.
மற்றவர்கள் இந்த மெயில்களை பார்க்க
முடியாவிட்டாலும் சேவை தரும் நிறுவனங்கள் தனி மென்பொருளை பயன்படுத்தி
இவற்றை படிக்கமுடியும். அப்படிதான் கூகுள் படித்து விளம்பரங்களுடன் தொடர்பு
படுத்துகிறது.
இதில் நீங்கள் மற்ற மின்னஞ்சல் சேவையை
பயன்படுத்தி ஜிமெயில் யூசருக்கு அனுப்பினாலும் அதுவும் படிக்கப்படுகிறது.
எனவே இது பாதுகாப்பற்ற தன்மைதான். கூகுள் இதுபற்றி விளக்கத்தை கூறினால்
மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும்” என்று கூறினார்.
தமிழ்த் தாயகத்திற்காக
S . முரளி
Labels:
Computer
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment