Digital Time and Date
Welcome Note
Tuesday, February 26, 2013
மனித உடலில் புதைந்துள்ள அறியத் தகவல்கள்
இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று.
மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு.
உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடது பக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணுலியூக் கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
ரெடினா என்பது விழித்திரை
ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறி குறி சுவை குறைந்து விடும்.
ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேரு மிடம்.
கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
ப்ளூரா என்பது நுரையீரல் உறை
இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள் ளன.
அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
உடலில் 206 எலும்புகள் உள்ளன.
பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகா லையும் இணைக்கும் எலும்பு
மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொ டை எலும்பு.
மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
முகத்தில் உள்ள எலும்புகள் 14.
கைகளில் உள்ள எலும்புகள் 27.
மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
மூளையில்
பெரிய பகுதி பெருமூளை – செரிப்ரம் என்று அழைக்கப் படுகிறது. இது பேச்சு,
பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபக ம், செயல், உணர்வு, இயக்கம்
போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000கோடி இரத்த சிவப்பணுக் களை உருவாக்குகிறது.
மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.
இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
வெஸ்டிபுலே–எனப்படுவது பற்கள், கன்னத்திற்குஇடைப்பட்ட பகுதி.
சைனஸ்
என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கு ம் காற்றை
நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியா கும். குரல் தெளிவாக
இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபி டெர்மிஸ், இதில் இரத்த
ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற
அடுக்கு அடித்தோல் என் றும் அழைக்கப்படுகிறது.
மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
மனிதஉடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3மில்லியன்களுக்குமேல் உள்ளன.
செரடோனின்–வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ் சுதல்.
உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.
Labels:
Information
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment