உலகளவில் பிரபலமான விப்ரோ நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் தலைசிறந்த
தொழிலதிபர்களுள் ஒருவருமான அஸிம் பிரேம்ஜி தனது சொத்துக்களிலிருந்து பாதி
மதிப்பை ஏழை எளியோருக்கு நன்கொடையாக வழங்கவுள்ளார்.
பில் கேட்ஸ்,
வாரன் பப்ஃபெட் போன்ற பிற உலக செல்வந்தர்களை போல அஸிம் பிரேம்ஜியும் தான்
இதுவரை சம்பாதித்த சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை சமூக நலனுக்காக
நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.
சிறந்த தொழிலதிபரான அஸிம்
பிரேம்ஜி ஏற்கனவே 9,000 கோடிகளை இந்திய குழந்தைகளின் கல்விக்காக
அளித்துள்ளார். பெரும்பாலான அமெரிக்கர்களே இத்தகைய தொண்டு காரியங்களில்
ஈடுபடும் நிலையில், அமெரிக்காவை சேராத ரிச்சர்ட் பிரான்சன், டேவிட்
சைன்ஸ்புரி என்பவர்களை அடுத்து, தனது சொத்துகளிலிருந்து பாதி மதிப்பை
மக்களின் நலனுக்காக வழங்குவதில் மூன்றாவது நபராக இணைந்துள்ளார் அஸிம்
பிரேம்ஜி.
இதுகுறித்து கூறிய அஸிம் பிரேம்ஜி, ஒருவரிடம் இருக்கும்
செல்வம் அவருக்கே சொந்தம் என்னும் எண்ணத்தை களைத்து, சமூகத்தில் நலிந்த
நிலையில் இருக்கும் மக்களின் நலனுக்காக அந்த செல்வத்தை பயன்படுத்த வேண்டும்
என்பதே எனது எண்ணம் எனத் தெரிவித்தார்.
பெரும் செல்வந்தரான அஸிம்
பிரேம்ஜி தனது சொத்துக்களின் பாதியை மக்களின் நலனுக்காக அளிக்கும் முதல்
இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
No comments:
Post a Comment