வீட்டுக்குள் இருக்கும் கம்ப்யூட்டர், தனது இன்டர்நெட் இணைப்பு மூலம்
எல்லையற்ற உலகவெளியை டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கிறது.
‘‘டிஜிட்டல் யுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு. அந்த ரகசியமான மாய
உலகத்துக்குள் மூழ்கிவிடும் பிள்ளைகள், தங்கள் பெற்றோரிடமிருந்து நீண்ட
தூரம் விலகிச் சென்றுவிடுகிறார்கள்’’ என்கிறது இந்தியாவில் செய்யப்பட்ட
லேட்டஸ்ட் சர்வே ஒன்று!
இன்டர்நெட் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபி
எடுத்த இந்த சர்வேக்கு பெயர், ‘டீன்களின் ரகசிய வாழ்க்கை’. ‘‘எஞ்சினியரிங்
படித்த பெரியவர்களை விட, டெக்னாலஜி உபகரணங்களைக் கையாள்வதில் டீன்ஏஜ்
பசங்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். கல்வி,
தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் இன்டர்நெட்டை
பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை
விடுகிறார்கள்’’ என்கிறார் மெக்காஃபி நிறுவனத்தின் கன்ஸ்யூமர்
மார்க்கெட்டிங் இயக்குனர் மெலானி டுகா.
இந்த சர்வே சொல்லும் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...
40
சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், தங்கள் வீட்டு அட்ரஸ் உட்பட எல்லா தகவல்களையும்
அப்பாவியாக இன்டர்நெட்டில் பலருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
21 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், ஏமாற்று வேலைகளையும் பொய் சொல்வதையும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்கிறார்கள்.
31
சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள், சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்கு
அறிமுகமாகும் புதிய நபர்களை நேரில் சென்று சந்திக்கிறார்கள். இது எத்தனை
ஆபத்துகளைத் தரும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதில் 17 சதவீதம் பேரே இதை
பெற்றோருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
டீன்ஏஜ் பிள்ளைகளில் ஐந்தில்
ஒருவர், ஆபாச இணையதளங்களைப் பார்க்கிறார். 32 சதவீத பெற்றோர்களே இதை
உணர்கிறார்கள். ‘‘இதையெல்லாம் பார்க்க வேண்டாம்’’ என பெற்றோர்கள்
எச்சரிக்கும் தளங்களை 37 சதவீத பிள்ளைகள் அடமாகப் போய்ப் பார்க்கின்றன.
‘‘உங்களுடைய
ஆபாசப் படங்களைப் பதிவேற்றுங்கள்’’ எனக் கட்டளையிடும் இணையதளங்களுக்கு
அடிபணிந்து, 2 சதவீத டீன்ஏஜ் பிள்ளைகள் தங்கள் படங்களை அனுப்புகிறார்கள்.
பிள்ளைகள்
வளர வளர, தாங்கள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறோம் என்பதை பெற்றோர்களிடம்
மறைக்க ஆரம்பிக்கிறார்கள். 16, 17 வயதில்தான் இப்படி மறைப்பது
ஆரம்பிக்கிறதாம்.
70 சதவீத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள்
பரிசுத்தமானவர்கள் என நம்புகிறார்கள். ‘‘அவர்கள் இன்டர்நெட்டில் என்ன
செய்தாலும் எங்களிடம் சொல்லாமல் மறைப்பதில்லை’’ என அப்பாவியாக
சொல்கிறார்கள். வெறும் 30 சதவீத பெற்றோரே பிள்ளைகளைக் கண்காணிக்கிறார்கள்.
ஒரு
காலத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ‘தலைமுறை இடைவெளி’
இருந்தது. இப்போது அந்த இடத்தில் ‘இன்டர்நெட் புதைகுழி’ இருக்கிறது!
தினகரன்
No comments:
Post a Comment