Digital Time and Date

Welcome Note

Monday, March 11, 2013

குஜராத் இனப்படுகொலையை மறந்துவிடலாமா?

குஜராத் இனப்படுகொலையை மறந்துவிடலாமா? 

 சில பதிவர்கள்   நமக்கு கீழ்கண்டவாறு அறிவுரை(?) பகர்கிறார்கள்!.

அது

இனப்படுகொலையை மறந்துவிடுங்கள் . குஜராத்தின் வளர்ச்சியை பாருங்கள். அவர் வெற்றி பெற்றது அவர் குஜராத்தை வளர்ச்சியின் பாதையில் இட்டுசென்றதால்தான் என்பதை ஏற்றுகொள்ளுங்கள் என்பதாக.

இது எப்படி இருக்கிறது என்றால் பெண்ணை  பலாத்காரம் செய்தவனுக்கே  ,காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்தவனுக்கே அப்பெண்களை திருமணம் செய்வித்துவிடுங்கள் என்பதுபோல் உள்ளது .

இது அதைவிட கேவலமானது . இவர்களுக்கு கொஞ்சமாகவாவது மனித தன்மை இருந்தால் இப்படியெல்லாம் எழுதியிருக்க மாட்டார்கள் . மானங்கெட்டவர்கள் .

அப்புறம் குஜராத்தின் வளர்ச்சிப்பற்றி தொண்டை கிழிய கத்துகிறார்கள் . அந்த சத்தத்தில் வறுமையில் வாடும் ஏழைகளின் அழுகை சத்தங்களை மறைக்க பார்கிறார்கள்

முதலில் குஜராத்தின் வளர்ச்சி என்பது கார்பரேட் வளர்ச்சிதான் ஒழிய அது சாதாரண மக்களின் வளர்ச்சி அல்ல.

அம்பானிகளின் முன்னேற்றம் . அங்கு எல்லா மக்களின் முன்னேற்றமாக காட்டப்படுகிறது. 

அங்கு கார்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சியை தவிர்த்து . அங்கு ஏழை மக்களின் முன்னேற்றத்தை காண்பது அரிதான ஒன்றாகத்தான் உள்ளது.

மாநிலத்தின் மக்கள் வரிப்பணத்தை பெரும் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்துவிட்டதின் விளைவு குஜராத்தில் சில கோடிஸ்வரர்கள் உருவாக துனைப்புரிந்தார்  மோடி . உடனே முன்னேற்றம் வளர்ச்சி என்ற கூப்பாடுதான்.

அதே நேரத்தில் ஏற்கனவே ஏழையாக இருந்த மக்கள் இன்னும் மோசமான வறிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எனபதை இந்த பதிவர்களுக்கு தெரியாத என்ன?.

சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் இந்திய மாநிலங்களின் வறுமை நிலவரம் (2008)பின் வருமாறு உள்ளது .

17 பெரிய மாநிலங்களில் குஜராத் 13 ஆவது இடத்தில் உள்ளது . ஒரிசா குஜராத்தை விட ஓர் இடம் முன்னிலையில் உள்ளது .

இரத்தத் சோகையால் பாதிக்கப்படத் பெண்களின் சதவீதம் 2006இல் 55.5% சதமாகும். இது 1999இல் 46.3%  சதமாக  இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய

நாம் இதையெல்லாம் சொன்னால் வேறு மாநிலங்களில் அவ்வாறு இல்லையா? என்று நம்மையே கேள்விகளால் அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள்தானே வளர்ச்சி வளர்ச்சி என்று கூப்பாடுபோடுகிரார்கள்.

உடனே இன்னொரு பதிவர் கர்நாடாகாவில் ப.ஜ.க ஆட்சியை பிடித்தது எப்படி இனப்படுகொலையினாலா என்ற புத்திசாலிதனமாக நம்மிடம் கேள்விகளை வைக்கிறார்.

நாம் திரும்ப திரும்ப சொல்வதெல்லாம்

மோடியை நாம் எதிர்ப்பது குஜராத் இந்துத்துவத்தின் சோதனை சாலை . அந்த சோதனையில் அவர்கள் வெற்றியையும் ஈட்டிவிட்டார்கள் . அதனை பிற இடங்களுக்கு கண்டிப்பாக கொண்டு செல்ல முயல்வார்கள் . அதற்கு அவர்கள் சாதகமான  ஒரு சூழ்நிலைக்காக காத்திருக்கிறார்கள். அன்று மத்தியிலும் மாநிலத்திலும் இந்துத்துவா தான் ஆட்சியில் இருந்தது . அதுபோல ஒரு சந்தர்ப்பத்திர்காகத்தான் இந்த வெறி நாய்கள் காத்துக்கிடக்கின்றனர்.

அப்புறம் காங்கிரஸ் ஆட்சியில்தானே அதிகளவு கலவரங்கள் நடந்தன என்று இன்னொரு கேள்வியையும் வைக்கிறார்கள் மோடியின் ரசிகர்கள்.

உண்மைதான். ஆனால் அந்த கலவரங்களை நடத்தியவர்கள் யார் ? இந்துத்துவவாதிகள்தானே ?

அப்புறம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குமா ?

நிச்சயமாக இல்லை. முதலாளித்துவ கட்சிகளிடம் நியாயம் நீதி நேர்மை இவையைஎல்லாம் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்யவே நேரம் போதவில்லை பாவம்.
நாம் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை மறக்க கூடாது . அதை நெஞ்சிலே ஏந்தி இந்த பாசிசம் வேரோடும் வேரடி மண்ணோடும் அழியும்வரை போராடுவோம் .

இன்னும் இந்த பாசிசத்தை தொடர்ந்து  அம்பலப்படுத்தி வரும் கம்யூனிசம் காம்பாட் ஆசிரியர் டீஸ்டா செடல்வாட் , தெஹல்கா பத்திரிகை குழுவினர் , சஞ்சீவ் பட் ஐ .பி எஸ் . ஆகியோருக்கும் இன்னும் நிறைய உள்ளங்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.

No comments:

Post a Comment