Digital Time and Date

Welcome Note

Monday, March 4, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 24

1582: பாப்பரசர் 13 ஆம் கிறகரி கிறகரியன் கலண்டரை அறிமுகப்படுத்தினார்.

1917: அமெரிக்கா மீது மெக்ஸிகோ போர் தொடுத்தால் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ, டெக்ஸாஸ், அரிஸோனா மாநிலங்களை மெக்ஸிகோவுக்கு பெற்றுக்கொடுப்பதாக மெக்ஸிகோவுக்கு ஜேர்மனி அனுப்பிய இரகசிய தந்தி அமெரிக்கத் தூதுவரிடம் பிரிட்டனினால் கையளிக்கப்பட்டது.

1918: எஸ்டோனியா சுதந்திரம் பெற்றது.

1920: ஜேர்மனியில் நாஸி கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1945: எகிப்திய பிரதமர் அஹ்மட் மஹெர் பாஷா கொலை செய்யப்பட்டார்.

1981: பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் டயானாவும் திருமணம் செய்யவிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

1981: ஏதென்ஸில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல நகரங்கள் சேதம், 16 பேர் பலி.

1999: சீனாவின் பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 61 பேர் பலி.

2007: உளவு செய்மதியொன்றை ஜப்பான் ஏவியது.

2008: கியூபாவில் சுமார் 50 வருடகாலமாக ஆட்சியிலிருந்த பிடெல் காஸ்ட்ரோவில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

2010: ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதலாவது இரட்டைச் சதம் குவித்த வீரர் எனும் பெருமையை இந்தியாவின் சச்சின் டெண்டுகல்கர் பெற்றார். இந்தியாவின் குவாலியர் நகரில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2962 ஆவது போட்டியாகும்.

No comments:

Post a Comment